“கர்ணன்” படப் பெயரை தனுஷ் மாற்றவில்லை
1 min readDhanush did not change the name of the movie “Karnan”
4.3.2021
‘கர்ணன்’ படப்பெயரை மாற்ற சிவாஜிகணேசன் ரசிர்கள் கோரிக்கையை தனுஷ் ஏற்றுக்கொள்ள வில்லை. அவர் தான் நடித்த கர்ணன் படத்தின் டீசர் ரிலீஸ் குறித்து டுவிட் போட்டுள்ளார்.
கர்ணன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் தனுஷ§க்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, லால், கவுரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது.
இந்தப்படத்திற்கு கர்ணன் என்று பெயர் வைக்ககூடாது என்று நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு முன்பு தனுஷ் நடித்த ஒரு படத்திற்கு திருவிளையாடல் என்று வைத்திருந்தனர். சிவாஜிகணேசன் ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அந்தப் படத்தின் பெயரை திருவிளையாடல் ஆரம்பம் என்று மாற்றிக் கொண்டனர்.
அதேபோல் கர்ணன் என்ற படத்தின் பெயரையும் மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாற்றவில்லை.
கர்ணன் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
டீசர்
இந்த நிலையில், இப்படத்தின் டீசர் குறித்த முக்கிய அப்டேட்டை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி, கர்ணன் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் இந்தவார இறுதியில் கர்ணன் பட டீசர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.