April 23, 2024

Seithi Saral

Tamil News Channel

பிரதமர் மோடி வேட்டி-சட்டையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம்

1 min read

Sami darshan at Madurai Meenakshi Temple in Prime Minister Modi Vetti -shirt

1.4.2021

பிரதமர் மோடி வேட்டி,சட்டை அணிந்தபடி மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

மதுரையில் மோடி

மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசாரகூட்டத்தில் பிரதமர் மோடி நாளை(வெள்ளிக்கிழமை) பங்கேற்கிறார். இதற்காக இன்றே(வியாழக்கிழமை) அவர் மதுரை வந்தார்.
மதுரை வந்த அவர் மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றார். அப்போது தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி,சட்டையில் வந்தார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பிரதமர் மோடிக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
முதலில் மீனாட்சி அம்மன் சன்னதியில் தரிசனம் செய்தார். அதன்பின் சுந்தரேசுவரர் சன்னதிக்குச் சென்று சாமி கும்பிட்டார்.

சீன அதிபரின் வருகையின் போது மாமல்லபுரத்தில் வேட்டி, சட்டையுடன் பிரதமர் மோடி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியின் வருகையட்டி மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.