June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றவாளிகள் 2 பேரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்த பெண் போலீஸ் அதிகாரி

1 min read

Female police officer who shot and arrested 2 of the culprits

25.3.2021

டெல்லியில் பயங்கர குற்றவாளிகள் 2 பேரை பெண் போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டு கைது செய்தார்.

குற்றாவாளிகள்

டெல்லியில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுவந்த ரோஹித் சவுத்ரி, டிட்டோ ஆகியோரை பிடித்துத் தருபவர்களுக்குச் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இவர்கள் இருவரும் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்.
இந்த நிலையில் குற்றவாளிகள் இருவரும் டெல்லியில் உள்ள பிரகதி மைதான பகுதியில் உள்ள வீட்டில் தங்கியிருப்பது குறித்த தகவல் காவல் துறையினருக்குக் கிடைத்துள்ளது. பின்னர் இன்று அதிகாலை 4.30 மணிக்கு டெல்லி உதவி காவல் ஆணையர் பங்கஜ், உதவி ஆய்வாளர் பிரியங்கா தலைமையிலான காவல் துறையினர் குற்றவாளிகள் தங்கியிருந்த வீட்டை சுற்றிவளைத்தனர்.

துப்பாக்கியால் சுட்டு கைது

இதனையறிந்த குற்றவாளிகள் தப்பிக்கத் துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்கள். அப்போது உதவி காவல் ஆய்வாளர் பிரியங்கா விரைவாகச் செயல்பட்டு குற்றவாளிகள் இருவரையும் முழங்கால் கீழ்ப் பகுதியில் சுட்டு போலீசாரின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து அவர்களைக் கைது செய்தார்.
இந்த என்கவுன்டர் நிகழ்வின்போது காவலர் பிரியங்காவை நோக்கி குற்றவாளிகள் துப்பாக்கியால் சுடத்தொடங்கினார்கள். ஆனால் அவர் பாதுகாப்பு உடை அணிந்திருந்ததால் அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

டெல்லி காவல் துறை வரலாற்றில் முதன் முறையாகப் பெண் காவல் அதிகாரி ஒருவர் என்கவுன்டர் செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். உதவி காவல் ஆய்வாளர் பிரியங்காவின் இந்த தைரியமான செயலை சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *