அனைத்து மாவட்டங்களிலும் பஸ் போக்குவரத்து; கோவில்கள் திறக்க அனுமதி
1 min read
Bus transport in all districts; Permission to open temples
2.7.2021
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகளுடன் ஊரடங்கை ஜூலை 12 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்க, கடந்த மாதம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நோய் பரவல் குறையத் தொடங்கியதை தொடர்ந்து, தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வரும், 5ம் தேதி காலை, 6:00 மணிக்கு நிறைவடைகிறது.
இந்தநிலையில் தலைமை செயலகத்தில், இன்று மருத்துவ நிபுணர்கள் குழு மற்றும் அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின், தமிழகம் முழுதும் ஒரே மாதிரியான தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
இ-பதிவு ரத்து
- அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் அமல்.
- மாவட்டங்களுக்கிடையேயான இ- பதிவு முறை ரத்து .
*தமிழகம் முழுதும் பொது போக்குவரத்திற்கு அனுமதி
*உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை உணவருந்த அனுமதி.
வழிபாட்டுத் தலங்கள்
*அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்க அனுமதி
*ஜிம்கள், விளையாட்டு கூடங்கள் திறக்க அனுமதி
*மது கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதி
*ஐ.டி., நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதி
*50 சதவீதம் பேருடன் பொழுதுபோக்கு பூங்கா செயல்பட அனுமதி
- தமிழம் முழுதும் 5 0 சதவீத இருக்கைகளுடன் அரசு, தனியார் பஸ் இயக்க அனுமதி.
எதற்கெல்லாம் அனுமதி இல்லை
*தியேட்டர்கள், நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதி இல்லை
*பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி இல்லை
*மால்களில் உள்ள தியேட்டர்கள் இயங்க அனுமதி இல்லை
*சமுதாயம் , அரசியல் பொது கூட்டங்களுக்கு அனுமதி இல்லை.
- தமிழம் முழுதும் கோயில் திருவிழாக்கள், குடமுழுக்கு நடத்த அனுமதியில்லை
ஊரடங்கு காலத்தில் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தனிநபர் இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.