August 8, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் 46,617 பேருக்கு கொரோனா; 853 பேர் பலி

1 min read

Corona for 46,617 people in India; 853 killed

2.7.2021

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 46,617 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ( முந்தைய நாள் பாதிப்பு48,786) மொத்த பாதிப்பு 3,04,58,251 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 853 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். (முந்தைய நாள் இறப்பு 1,005). இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,00,312 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,95,48,302 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 59,384 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,09,637 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 34,00,76,232 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *