கர்நாடகம் உள்பட 8 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்; ஜனாதிபதி உத்தரவு
1 min read
Appointment of new governors for 8 states including Karnataka; Presidential order
6/7/2021-
கர்நாடகம் உள்பட 8 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கவர்னர்கள் நியமனம்
அரசியல் சாசனத்தின்படி ஜனாதிபதியின் பிரதிநிதியாக மாநில கவர்னர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஐந்து ஆண்டுகள் கொண்டது இந்தப் பதவிக் காலம். அதன்பிறகு கவர்னரை மாற்றுவது அல்லது அவரே தொடர்வதை ஜனாதிபதி முடிவு செய்வார்.
அந்த வகையில், கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். அதன்விவரம் வருமாறு:-
மிசோரம்
- கர்நாடகா மாநில கவர்னராக தாவர்சந்த் கெலாட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தற்போது மத்திய அமைச்சராக உள்ளார்
- மிசோரம் கவர்னராக ஹரிபாபு நியமிக்கப்பட்டுள்ளார்.
- மத்திய பிரதேசம் மாநில கவர்னராக மங்குபாய் சகன்பாய் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இமாச்சல் பிரதேசம் கவர்னராக ராஜேந்திரன் விஸ்வநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
- கோவா கவர்னராக ஸ்ரீதரன் பிள்ளை நியமிக்கப்பட்டார். இவர் தற்போது மிசோரம் கவர்னராக இருந்து வருகிறார்.
- திரிபுரா கவர்னராக சத்யதேவ் நாராயண் ஆரியா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது அரியானா மாநில கவர்னராக உள்ளார்.
- ஜார்க்கண்ட் மாநில ரமேஷ் பயஸ் நியமிக்கப்பட்டார். இவர் தற்போது திரிபுரா கவர்னராக உள்ளார்.
- அரியானா கவர்னராக பண்டாரு தத்தாத்ரேயா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இப்போது இமாச்சல் பிரதேசம் கவர்னராக உள்ளார்.