இந்தியாவில் கொரோனா 34,703 பேராக குறைந்தது; 553 பேர் சாவு
1 min read
Corona in India fell to 34,703; 553 deaths
6.7.2021
இந்தியாவில் கடந்த 111 நாட்களில் இல்லாத அளவுக்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு 34,703 பேராக குறைந்தது.
கொரோனா
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்குநாள் குறைந்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 43 ஆயிரத்து 71 பேருக்கு தொற்று பாதித்து இருந்தது. நேற்று 39 ஆயிரத்து 796 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், கடந்த 111 நாட்களில் இல்லாத அளவாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 34,703- ஆக குறைந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 64 ஆயிரத்து 357- ஆக சரிந்துள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 51,864 ஆக உள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 97.17 சதவீதமாக உள்ளது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 2.11 சதவிகிதமாக உள்ளது. கடந்த 15 தினங்களாக தொற்று பாதிப்பு விகிதம் 3 சதவீதத்திற்கும் கீழ் பதிவாகி வருகிறது.
553 பேர் சாவு
நாடு முழுவதும் கொரோனா இறப்பும் குறைந்து வருகிது. நேற்று 553 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 4 லட்சத்து 3 ஆயிரத்து 281 ஆக உள்ளது.
தற்போது நாடு முழுவதும் 4 லட்சத்து 64 ஆயிரத்து 357 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.