June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

ரஜினிகாந்தின் மக்கள் மன்றம் கலைப்பு

1 min read

Dissolution of Rajinikanth’s People’s Forum

12.7.2021
வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை என்று ரஜினிகாந்த் திட்டவட்டமாக கூறினார். மேலும், தனது மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு ரசிகர் மன்றமாக செயல்படும் என்றும் அறிவித்துள்ளார்.

ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், தன் உடல் நிலையை காரணம்காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்று (ஜூலை 12) சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள, ராகவேந்திரா திருமண மண்டபத்தில், தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார்.

இதனை அடுத்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்பிற்கு பிறகு ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசியில் இல்லை

கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *