May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

காருக்கு வரி விதிக்க தடை கேட்ட நடிகர் விஜய்க்கு ஐகோர்ட்டு ரூ.1 லட்சம் அபராதம்

1 min read
Actor Vijay fined Rs 1 lakh for banning car tax
13.7.2021
 தனது காருக்கு வரி விதிக்க தடைக்கேட்டு வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது. மேலும் வரி என்பது நன்கொடை அல்ல என்றும் சினிமா ஹீரோக்கள் நிஜ வாழ்க்கையில் ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது எனவும் நீதிபதி கூறியுள்ளார்.
 காருக்கு வரி
 இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த கார் கடந்த 2021 ம்  ஆண்டு இற்குமதி செய்யப்பட்டது.
  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், விஜயின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்ததுடன், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். இந்த அபராதத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 2 வாரத்தில் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
 மேலும் நீதிபதி கூறுகையில், ‛சமூக நீதிக்காக பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் நடிகர்கள் வரி விலக்கு கோருவதை ஏற்க முடியாது. சினிமா நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். நிஜ வாழ்வில் ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது. வரி செலுத்துவது என்பது நன்கொடை கொடுப்பது போன்றது அல்ல, குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு.' என கருத்து தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.