May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்த அரசியல் நாகரீகம் வரவேற்கத்தக்கது

1 min read

This political civilization is welcome

6.8.2021
ஒரு காலத்தில் அரசியல் சிறப்பாகவே இருந்தது. சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கடுமையாக வாதம் செய்தாலும் வெளியே வந்தவுடன் அதை காட்டிக்கொள்ள மாட்டார்கள். கொள்கைதான் அவர்களுக்கு எதிராக இருக்குமே தவிர மனிதாபிமான நட்பு அவர்களுக்குள் எதிராக இருக்காது.
தமிழகத்தில் இந்த அரசியல் நாகரீகம் மோசமானது. அரசியல் பகையை சொந்த பகையாகவே மாற்றிக் கொண்டனர். ஆளும் கட்சி தலைவரையும், எதிர்க்கட்சி தலைவரையும் எந்த நிகழ்ச்சியிலும் ஒன்றாக பார்க்கவே முடியாது.
இப்போது அந்த நிலை மாறியுள்ளது. இது வரவேற்கத்தக்கது.

அ.தி.மு.க.வின் அவைத்தலைவரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான மதுசூதனன் (வயது 80) நேற்று மாலை மதுசூதனன் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
மதுசூதனன் உடல், சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோருடன் வந்து, மதுசூதனன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மதுசூதனன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அவர், பின்னர், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவர் 2 பேருக்கும் நடுவே அமர்ந்து சிறிது நேரம் உரையாடினார். பின்னர் அங்கிருந்து மு.க.ஸ்டாலின் புறப்பட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.