June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

கொரோனா தடுப்பூசிக்கு பதில் நாய் கடி ஊசி செலுத்திய டாக்டர், நர்சு பணி இடைநீக்கம்

1 min read

Doctor, nurse suspended for injecting dog bites in response to corona vaccine

29.9.2021

மராட்டிய மாநிலம் தானே அருகே கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக நாய் கடிக்கும் போடப்படும் ரேபீஸ் ஊசி செலுத்திய டாக்டர் மற்றும் நர்சை பணி இடைநீக்கம் செய்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்து உள்ளது.

தடுப்பூசி

மராட்டிய மாநிலம் தானே அருகே கல்வா அட்கோன்னேஷ்வர் நகர் பகுதியில் ராஜ்குமார் யாதவ் என்பவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அங்குள்ள ஒரு சுகாதார நிலையத்திற்கு சென்றார். அங்கு பணியில் இருந்த டாக்டர் ராக்கி தாவ்டே மற்றும் நர்சு கீர்த்தி ராயத் ஆகியோர் அவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.

பின்னர் ஊசி மருந்து பாட்டிலை கவனித்தபோது, அது கொரோனாவிற்கான தடுப்பூசி இல்லை என்பதும், ரேபீஸ் வெறிநாய்கடிக்காக செலுத்தப்படும் ஊசி மருந்து என்பதும் தெரியவந்தது.

பணியிடை நீக்கம்

இது குறித்து ராஜ்குமார் தானே மாநகராட்சியில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் இதற்கு காரணமாக இருந்த டாக்டர் ராக்கி தாவ்டே மற்றும் நர்சு கீர்த்தி ஆகிய 2 பேரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்தனர்.

இவர்கள் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்டவருக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *