May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

ஜப்பானின் புதிய பிரதமராக புமியோ கிஷிடா தேர்வு

1 min read

Fumio Kishida elected new Prime Minister of Japan

29.9.2021

ஜப்பான் பிரதமர் யோஷிகிதே சுகா பதவி விலகுவதாக அறிவித்த நிலையில், புதிய பிரதமராக புமியோ கிஷிடே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பான் பிரதமர்

ஜப்பானில் கடந்தாண்டு பிரதமராக பதவியேற்ற யோஷிகிதே சுகா, பதவி விலகுவதாக அறிவித்தார். ஜப்பானில் ஆளுங்கட்சியின் தலைவராக இருப்பவரே பிரதமராக பொறுப்பேற்பர். அதன்படி, பிரதமர் சுகா பதவி விலகுவதாக அறிவித்த நிலையில், ஆளுங்கட்சியான லிபரல் ஜனநாயகக் கட்சிக்குள் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது.

அதில் அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் புமியோ கிஷிடா ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 64 வயதான புமியோ கிஷிடா, ஜப்பானின் அடுத்த பிரதமராக வரும் அக்.,4ம் தேதி பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.