June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

மகாத்மா காந்தி பிறந்த நாள்; நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

1 min read

Mahatma Gandhi’s birthday; Honor the President, Prime Minister at the memorial

2.10.2021
மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

மகாத்மா காந்தி பிறந்தநாள்

தேசப்பிதா மாகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல தலைவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “ஏராளமான மக்களுக்கு வலிமை தரும் காந்தியின் உன்னத கோட்பாடுகள் உலக அளவில் பொருத்தமானவை” எனப்பதிவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *