May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாள் ; பிரதமர் மோடி மரியாதை

1 min read

Birthday of former Prime Minister Lal Bahadur Shastri; Respect for Prime Minister Modi

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாள் ; பிரதமர் மோடி மரியாதை
2/10/2021

முன்னாள் பிரதமரும் சுதந்திர போராட்ட வீரருமான லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

லால்பகதூர் சாஸ்திரி

லால் பகதூர் சாஸ்திரி 1904ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி உத்தரபிரதேச மாநிலம் முகல்சாராய் மாவட்டத்தில் பிறந்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் அவர் போக்குவரத்து மற்றும் காவல்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

1964ம் ஆண்டு பாரத பிரதமராக பொறுப்பேற்றார். 1965ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரை வெற்றிகரமாக வழி நடத்தினார்.

‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ என்னும் முழக்கத்தை நாடு முழுவதும் ஒலிக்கச் செய்த பெருமைக்குரியவர்.

ஜனவரி 11, 1966ம் ஆண்டு தாஸ்கெண்ட்டில் வைத்து மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

மோடி மரியாதை

லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. அவரது நாளை முன்னிட்டு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “ முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஜி அவர்களுக்கு எனது மரியாதையை உரித்தாக்குகிறேன். அன்னாருடைய வாழ்வின் மதிப்புகள் மற்றும் கொள்கைகள் நாட்டு மக்கள் அனைவருக்கும் உத்வேகத்தை தரும்” எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடி, லால் பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட பல தலைவர்கள் டெல்லி விஜய்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.