சேலையில் சிக்கிய கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை
1 min readKannayiram with Pachayath / Story by Thabasukumar
27.10.2021
கண்ணாயிரத்தை தேடி வந்த பெண்ணால் ஏற்பட்டபிரச்சினை குறித்து அருவா அமாவாசை தலைமையில் பஞ்சாயத்து நடந்தது. தன்னை தேடிவந்த பெண் தன்மனைவி இல்லை, ஆனால் அவருக்கு
குழந்தை பிறக்க நான்தான் காரணம் என்று கண்ணாயிரம் சொல்ல, கோபத்தில் அருவா அமாவாசை அரிவாளை காட்டி மிரட்டினார்.
இதில் கண்ணாயிரம் மயங்கி விழுந்ததால் பஞ்சாயத்தை மதியம் இரண்டு மணிக்கு ஒத்திவைத்த அருவா அமாவாசை தன் மகள் பூங்கொடியுடன் வீட்டுக்கு சாப்பிடச்சென்றார். கண்ணாயிரத்தை வீட்டுக்குள் விடாத பூங்கொடி அவருக்கு ரச சாப்பாடும் அருவா அமாவாசைக்கு கருவாட்டு குழம்பு சாப்பாடும் கொடுத்தார்.
கண்ணாயிரம் முகத்தை சுழித்துக் கொண்டு சாப்பிட்டார். இரண்டு சோடாக்களையும் மனைவி தூக்கிக்கொண்டு சென்றதால் கோபத்தில் இருந்தார். இரண்டு மணி நெருங்கியதும் பஞ்சாயத்து நடக்கும் இடத்துக்கு மக்கள் வரத் தொடங்கினர்.
கண்ணாயிரம் சாப்பிட்டு கையை கழுவிவிட்டு மக்கள் வருவதை பார்த்துக்கொண்டே இருந்தார். அருவா அமாவாசை சாப்பிட்டபின் பஞ்சாயத்துக்கு செல்ல தயாரானார். தனது பெரிய மீசைக்கு தேங்காய் எண்ணை தடவினார். மகளிடம் குடிக்க தண்ணீ கேட்டார். அவர் செம்பில் கொடுத்த தண்ணீரை மடக், மடக் என்று குடித்தார். ஆனாலும் அவருக்கு ஒருதெம்பு வரவில்லை. அருவா இல்ல அதனால்தான் தெம்புவர மாட்டேங்குது என்று நினைத்தவர் தன்மகளிடம், பூங்கொடி அந்த அரிவாளை எங்கே. அதை கொஞ்சம் எடு, அது இருந்தாதான் பஞ்சாயத்துக்கு போகமுடியும் என்றார்.
பூங்கொடி பதட்டமாக அருவா வேண்டாம்பா, ஒருகம்புதர்ரேன் வேணும்னாவைச்சிக்கிங்க என்றார்.
அருவா அமாவாசை, அம்மா என் பெயரே அருவா அமாவாசை, நான் அருவா இல்லாம போனா, அது என் பெயருக்கு இழுக்கு என்றார்.
உடனே பூங்கொடி, உங்க அருவா எனக்கு வேண்டாம்பா ஆனா இந்த அரிவாளை நீங்க மேசையில் வையுங்க, கையில் எடுக்கக்கூடாது, சரியா என்றார்.
அருவா அமாவாசை தலையை ஆட்டினார்.
பின்னர் கண்ணாடியில் தன் மீசையின் கம்பீரத்தை ரசித்தவர் கையில் அரிவாளுடன் பஞ்சாயத்துக்கு புறப்பட்டார்.
பூங்கொடி ஒருசெம்பில் தண்ணீருடன் அவருடன் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார். கண்ணாயிரம் வாசலில் காத்திருந்தார். அவரை பார்த்ததும் பூங்கொடி, ஏங்க பஞ்சாயத்துக்கு வாங்க என்றார். பூங்கொடிகையில் சோடா இல்லாததால், சோடா எங்கே. உங்க அப்பா குடிச்சிட்டாரா என்று கேட்டார்.
பூங்கொடி கோபத்தில் அதெல்லாம் இல்லை. உள்ளேதான் இருக்கு நீங்க இந்த செம்பு தண்ணீயை மேசையில் கொண்டு வையுங்க. நான் சோடாவை எடுத்துட்டு வர்றேன் என்று சொன்னார். சரி,என்று சொன்ன கண்ணாயிரம் செம்பு தண்ணீரை வாங்கிக்கொண்டு அருவா அமாவாசை யின் பின்னால் நடந்தார். அருவா அமாவாசை அரிவாளை கையில் ஆட்டிக்கொண்டு சென்றதை பார்த்ததும் கண்ணாயிரத்துக்கு பயம் ஏற்பட்டது. இதை எதுக்கு கையில் தூக்கிக்கொண்டு திரிகிறார். சின்னபிள்ளங்க பயப்புடுமில்லையா. யாரு அவருக்கு எடுத்து சொல்லுறது என்று முணங்கியபடி நடந்தார்.
அருவா அமாவாசை நாற்காலியில் சென்று அமர்ந்தார். மேசை மீது அரிவாளை வைத்தார். மக்கள் அந்த அரிவாளை யே கூர்ந்துபார்த்தனர். கண்ணாயிரம் செம்பு தண்ணீரை அரிவாள் அருகே கொண்டு வந்து வைத்தார். பூங்கொடி இரண்டு சோடாபாட்டில்களை எடுத்துவந்தார். கண்ணாயிரம் தன்மனைவியிடம் அதை ஏங்கிட்டகொடு. நான்தான்வீட்டுக்கு எடுத்துட்டு வந்தேன். நானே மேசையில் வைக்கிறேன் என்றார்.
பூங்கொடியும் சரி பத்திரமாவையுங்க என்று சோடாபாட்டில்களை கொடுத்தார். கண்ணாயிரம் அதை வாங்கி பார்த்தார். பின்னர் எப்படியும் நமக்கு கிடைக்காமலா போகும் என்று சொல்லிவிட்டு மேசையில் அதை வைத்தார். அருவா அமாவாசை கூட்டத்தில் உள்ளவர்களை பார்த்து எல்லோரும் வந்தாச்சா என்று கேட்டார்.
கண்ணாயிரம் உடனே கவுசல்யா வரலே என்று கத்தினார். அதை பார்த்த முதியவர் மெல்ல, பார்த்தீராய்யா.. கவுசல்யா மீது கண்ணாயிரத்துக்கு உள்ள அக்கறையை என்று அருகில் உள்ளவரிடம் கூறினார். அதற்கு அவர், அந்த பெண்ணு ஒல்லியா, அழகா இருக்கே, கண்ணாயிரம் விடுவாரா என்றார்.
அருவா அமாவாசை எங்கய்யா அந்த பொண்ணு என்று அதட்டலாக கேட்டார். தெரியலையே என்று எல்லோரும் சொன்னார்கள்.
அருவா அமாவாசை ஆ… ஊருக்கு பஸ்ஏறிபோயிட்டா.. கண்ணாயிரம்.. நீதான் பஸ்ஏற்றி அனுப்பினியா என்று கோபமாக கேட்டார். கண்ணாயிரம்… ஆ.. எனக்கு தெரியாது. நான் வேணும்னா தேடிபாக்கட்டுமா என்றார். அருவா அமாவாசை, நீ இங்கே நில்லு, வேறயாராவது கடைவீதியில் போய் தேடிபாத்துட்டுவாங்க என்றார்.
உடனே மோட்டார் சைக்கிள்வாலிபர் நான் பாத்துட்டு வர்றேன் என்று புறப்பட்டுசென்றார். கடைவீதியில் தேடினார். அங்குள்ள ஒரு ஜவுளிக்கடையில் சேலை ரகங்களை கவுசல்யா பார்த்துக் கொண்டிருந்தார். அருகில் சிறுவன் சுரேஷ் நின்று கொண்டிருந்தான். மோட்டார்சைக்கிள்வாலிபர்,அங்கேவிரைந்தார். ஏம்மா, பஞ்சாயத்திலே உன்னேதேடுறாங்க.. நீங்க இங்கே இருக்கிய வாங்க என்றான்.
அதற்கு அவள், சேலை தள்ளுபடி விலையில் கிடைக்குது. இன்றோடு தள்ளுபடி கடைசின்னாங்க. இரண்டு சேலை வாங்கிட்டுபோயிடலாமுன்னு பார்த்தேன் என்றாள்.
உடனேஅந்தவாலிபர், சேலை வாங்க காசு வைச்சிருக்கியளா என்றுகேட்டான். அதற்கு அவள், கடைக்காரரிடம் காசு இல்லைபிறகுவந்து தர்ரேன்னு சொன்னேன். கடைக்காரர், கண்ணாயிரத்துக்கிட்ட நான் வாங்கிக்கிறேன்னு சொன்னார். என்றாள்.
அதை கேட்ட வாலிபர் ஏம்மா, சேலைபிறகுவாங்கலாம். பஞ்சாயத்து முக்கியமில்லா. வாங்க சீக்கிரம் என்றார். உடனே கவுசல்யா கடைக்காரரிடம் இந்த சேலை இருக்கட்டும். பஞ்சாயத்து முடிஞ்சதும் வந்துவாங்கிக்கிறேன் என்று சொல்லிவிட்டு மகனுடன் புறப்பட்டார்.
பஞ்சாயத்து நடக்கும் இடத்துக்கு கவுசல்யாவந்ததும் அருவா அமாவாசை கோபத்தில் எங்கே போன.. என்று அதட்டலாக கேட்டார். மோட்டார் சைக்கிள் வாலிபர் உடனே நான் சொல்லுறேன். கண்ணாயிரம் அக்கவுண்டிலே ஜவுளிக்கடையிலே சேலைவாங்க போச்சு. சேலை பிறகு வாங்கலாமுன்னு நான் கூட்டிட்டு வந்துட்டேன் என்றான்.
அருவா அமாவாசை கோபத்தில் யார் அக்கவுண்டிலே யார் சேலைவாங்குறது என்று கத்தினார்.
கவுசல்யா உடனே நான் சொல்லுறதை கேளுங்க கடைக்காரர் தான் என்று இழுத்தார்.
ம். நீ பேசாதே, நீ பேசாதே. உன்னாலத்தான் பிரச்சினையே. நீ எப்படி கண்ணாயிரம் அக்கவுண்டிலே சேலைவாங்கலாம். சொல்லு என்றார்.
கவுசல்யா, கடைக்காரர் தான் கண்ணாயிரத்துக்கிட்ட காசு வாங்கிக்கிறேன்னு சொன்னார். நான் காசு இல்லைன்னுதான் சொன்னேன் என்றாள்.
அருவா அமாவாசை கண்ணாயிரத்தை முறைத்துபார்த்தார். கண்ணாயிரம் எனக்கு ஒண்ணும்தெரியாது. எனக்கு ஒண்ணும்தெரியாது. என்று நடுங்கியபடிகூறினார்.
பூங்கொடி ‘ஓ’ வென்று அழுதாள். ஏய்யா. ஒருநாளும் எனக்கு சேலை எடுத்து தந்தது இல்ல. அவளுக்கு அக்கவுண்டிலே சேலை எடுத்துகொடுக்கிறீயளா. நான் என்ன செய்வேன். பஞ்சாயத்து நடக்கும் போதே இப்படியா. என்று கண்ணீர் வடித்தார்.
கண்ணாயிரம் மெல்ல, பூங்கொடி, என்ன தப்பாநினைக்காதே. நான் சேலை எடுத்துட்டு வந்தா அதுசரியில்ல இதுசரியில்ல, கடைக்காரன் உங்களை ஏமாத்திட்டான் என்று சொல்வே. அதனால்தான் நான் உனக்கு சேலைவாங்கியதரல. பஞ்சாயத்துமுடிஞ்சதும் வாங்கித்தருரேன் என்றார். பூங்கொடி ஏற்றுக்கொள்ளவில்லை. நீங்க சமாளிக்கிய. உங்க அக்கவுண்டிலே அவளுக்கு எப்படி சேலைவாங்கி கொடுத்தீங்க என்றுமீண்டும்கேட்டார்.
(தொடரும்)
-வே. தபசுக்குமார். புதுவை.