கொல்கத்தா மாநிலத்தை பிரிக்க அனுமதிக்க மாட்டேன் – மம்தா உறுதி
1 min readI will not allow the state of Kolkata to be divided – Mamata assured
7.12.2022
கொல்கத்தா மாநிலத்தை பிரிக்க அனுமதிக்க மாட்டேன் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
மம்தா பானர்ஜி
தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் பாஜக தனி மாநில கோரிக்கைகளை வலியுறுத்துகிறது. மேற்கு வங்காளத்தில் 2024-ம் ஆண்டு நடைபெற இருக்கும் பொதுத்தேர்துலுக்கு முன்னதாக தனி மாநிலமாக அமைக்கப்பட வேண்டும் என்று பாஜக தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தேவைப்பட்டால் அத்தகைய முயற்சிகளை முறியடிக்க தனது சொந்த ரத்தத்தை சிந்தவும் தயார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கட்சி கூட்டத்தில் மம்தா உரையாற்றியபோது கூறியதாவது:-
தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் பாஜக தனி மாநில கோரிக்கைகளை வலியுறுத்துகிறது. சிலர் என்னை மிரட்டுகிறார்கள். நான் கவலைப்படவில்லை. இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு நான் பயப்படவில்லை.
பிரிக்க முயற்சி
மேற்கு வங்கத்தை பிரிக்க முயற்சித்தால் எனது ரத்தத்தை கூட சிந்துவேன் ஆனால் மாநிலத்தை பிரிக்கவிட மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.