May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை பயமுறத்திய குடை/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

The Umbrella that Scared Kannayiram/ Comedy Story/ Tabasukuma

20.9.2022
கண்ணாயிரம் குற்றாலம் செல்லும் வழியில் திண்டுக்கல்லிலிருந்து மதுரை வரும் வழியில் பஸ்சில் எலிகடித்த முருக்கு பாக்கெட்டை பஸ் ஜன்னல்வழியாக கீழே வீசினார்.அப்போது பஸ்பின்னால் மோட்டார்சைக்கிளில்வந்த வாலிபரின் முகத்தில்பட அவர் அந்த பஸ்சை நண்பர்களுக்கு செல்போனில் தகவல்தெரிவித்து மடக்க..கண்ணாயிரம் ஒன்றும் தெரியாததுபோல் பஸ் இருக்கையின் கீழ் பதுங்கிக்கொள்ள பஸ்சில் ஏறிய வாலிபர்கள் முறுக்குபாக்கெட்டை வீசியது யார் என்று சொல்லவில்லையென்றால் பஸ்சை சிறைபிடிப்போம் என்று மிரட்ட சுடிதார்சுதா எழுந்து நான்தான் முறுக்கு பாக்கெட்டை கீழே வீசினேன் என்று சொல்ல வாலிபர்கள் அறிவுரை சொல்லிவிட்டு கீழே இறங்கினார்கள்.அவர்கள் இறங்கிவிட்டதை அறிந்த கண்ணாயிரம் ஜன்னல்வழியாக அந்த வாலிபர்களுக்கு கையசைக்க கோபத்தில் கண்ணாயிரம் கன்னத்தில் பூங்கொடி பளார் என்று அறைந்தார்.

எல்லோரும் அதிர்ச்சியோடு பார்த்தபோது..பூங்கொடி அவர்களை பார்த்து என்னா பெரிய கொசு..ஜன்னலை பூட்டுங்க..கொசு கடிச்சது கூட உங்களுக்கு தெரியல..என்று சத்தம் போட கண்ணாயிரம் வேகமாக ஜன்னலை பூட்டினார்.
இந்த ஜன்னல் கரையோரமே நமக்கு சரிவராது பூங்கொடி நீ இங்கேவா..நான் அங்கே போகிறேன் என்று இடமாறினார். கன்னத்தை தடவிக்கொண்டே பூங்கொடி உண்மையிலே என்ன கொசு கடிச்சுதா என்று கேட்க பூங்கொடி முறைக்க கண்ணாயிரம் கப்சிப் ஆனார்.
உடனே பயில்வான் எழுந்தார்.அன்பான சுற்றுலாபயணிகள் கவனத்திற்கு…உங்களுக்கு எனது அன்பான வேண்டுகோள்…ஓடும் பஸ்சிலிருந்து குப்பைகளை வெளியே வீசாதீங்க..யார்மேலேயும் பட்டா பெரிய பிரச்சினை ஆயிடும்.
குறிப்பா கண்ணாயிரத்துக்குத்தான் இந்த தகவலை சொல்லுறன். நெய்முறுக்கை அவர்தான்வாங்கிவந்தார். சுடிதார்சுதா எழுந்து தான்தான்வீசினேன் என்று சொன்னதால் வாலிபர்கள் சும்மாவிட்டுவிட்டு போய்விட்டார்கள். கண்ணாயிரந்தான் முறுக்கு பாக்கெட்டை வீசினது என்று தெரிஞ்சா கண்ணாயிரம் கன்னத்திலே பொளேர் என்று அடிச்சிருப்பாங்க…தப்பிட்டாரு. எனவே வாலிபர்களிடமிருந்து நம்மை மீட்ட சுடிதார்சுதாவுக்கு எல்லோரும் நன்றி தெரிவித்து கரகோஷம் பண்ணுங்க என்றார்.
எல்லோரும் எழுந்து நின்று கரகோஷம் செய்தார்கள்.கண்ணாயிரமும் பூங்கொடியும் எழாமல் அமர்ந்திருந்தனர்.
கண்ணாயிரம் மெல்ல பூங்கொடியிடம்..ஏய்..அந்த வாலிபர்களிடம் மாட்டினால் அவர்கள் பொளேர் என்று கன்னத்தில் அடித்திருப்பார்கள்.ஆனால் அதுக்கு பதிலாக நீ என் கன்னதில் அடிச்சிட்ட..எப்படியோ அடி நிச்சயம் என்பது உறுதியாயிட்டு.கன்னம் வலிக்குது என்றவாறு கன்னத்தை தடவினார்.
பேசாமவாங்க…இல்லன்னா..கீழே விழுந்த ஐந்து ரூபாயை தேடச்சொல்லிடுவேன்…என்க கண்ணாயிரம் கப்சிப்பானார்.
அவர்களிடம் பயில்வான் என்ன ஆச்சு என்று கேட்க..பூங்கொடி…என் கணவரை யாரும் காப்பாற்றியதாக கூறிக்கொள்ள வேண்டாம்.வாலிபர்கள் பத்து எண்ணுறதுக்குள்ளே அவர் எழுந்து சொல்லத்தான் நினைத்தார். நான்தான் அவரிடம் கீழேவிழுந்த ஐந்து ரூபா நாணயத்தை எடுங்க..பத்து சொல்லும்போது நான்முதுகை தட்டுறேன். நீங்க எழுந்து தெரியாம முறுக்கு பாக்கெட்டை வீசிட்டேன்னு சொல்லுங்க என்று என் கணவரிடம் சொன்னேன். பத்து எண்ணும்போது அவர் எழுமுன் சுடிதார்சுதா எழுந்து தான்தான் முறுக்கு பாக்கெட்டை வீசினேன் என்று சொல்லிட்டாரு.என்னமோ நாங்க தப்பை மறைச்சமாதிரியும் சுடிதார்சுதா காப்பாற்றுனமாதிரியும் சொல்லுறது சரியில்ல…என்றார்.
பயில்வான் ..ஆ..சரி..அமைதி..அமைதி..அடுத்து பஸ் மதுரையில்தான் நிக்கும். பாட்டு படம் எதுவும் கிடையாது.எல்லோரும் நல்லா தூங்குங்க என்றார்.
விளக்குகள் ஆணைக்கப்பட்டு மீண்டும் பஸ் மின்னல் வேகத்தில் சென்றது.

பூங்கொடிக்கு சுடிதார் சுதான்னாலே பிடிக்கமாட்டேங்குது.சுடிதார் சுதாவுக்கு என்னை பிடிக்குது.என்ன பண்ணுறது.குற்றாலம் டூர் முடியுறவரைக்கும் இரண்டு பேருக்கும் தகராறுவராம இருக்கனும்..இல்லன்னா இறைச்சிகடைக்காரன் நம்ம தோலை உரிச்சுப்புடுவான்..என்ன பண்ணுறது.ஜென்ம சனி நம்மள ஆட்டிப்படைக்குது.அதான் எதை தொட்டாலும் பிரச்சினையா இருக்குது. ஜென்மச்சனி விலகிட்டா எல்லாம் சரியாகிடும்.அது விலகுறமாதிரி தெரியலையே என்று கண்ணாயிரம் மனம்வருந்தினார்.

அப்போது எதிரே ஒரு லாரி மின்னல் வேகத்தில் சுற்றுலா பஸ்மீது மோதுதுவதுபோலவந்து
சைடுவாங்கி சென்றது.சுற்றூலா பஸ் தட்டுதடுமாறி ரோட்டைவிட்டு இறங்கி நின்றது.பஸ்சிலிருந்த எல்லோருக்கும் உயிர்போய் வந்தது. என்னச்சா..என்னச்சு..என்று எல்லோரும் டிரைவரிடம் கேட்க…ஒண்ணுமில்ல…லாரிக்காரன் தாறுமாறா வந்துட்டான். கொஞ்சம் சுதாகரிக்காமல் இருந்திருந்தா அவ்வளவுதான் என்று படப்படப்புடன் சொல்ல எல்லோரும் அப்பாட தப்பிப்பிழைச்சோம் என்றனர்.
கண்ணாயிரமும் பூங்கொடியும்..ம் பாதி முறுக்கு டீயை இன்னும் குடிக்கல..அதுக்குள்ள இப்படியா..என்று முணுமுணுத்தனர். ஆனால் சுடிதார் சுதா எந்தவித பதட்டமும் இல்லாமல் அமைதியாக இருந்தார்.
பக்கத்திலிருந்த பெண் என்ன நீங்க..பெரிய விபத்திலிருந்து தப்பியிருக்கோம்…எந்த பதட்டமும் இல்லாமல் இருக்கீங்க என்று கேட்க..சுடிதார்சுதா சிரித்தபடி..எதுவும் நடக்கலையே..பிறகு எதுக்குபயப்படணும்..பயந்தா எதுவும் நடக்காம இருக்குமா..என்று எதிர்கேள்வி கேட்டார்.உடனே அந்த பெண்…சுதா உனக்கு குழந்தையா குட்டியா எதுவும் கிடையாது.உனக்கு ஏன் பயம்வரப்போகுது என்று சொல்ல சுடிதார்சுதா சத்தமாக சிரித்தார்.
பயில்வான் நிலைமையை புரிந்து கொண்டு டிரைவரிடம் போய் டிரைவர் சார்…கொஞ்சம் ரெஸ்டு எடுத்தூக்கொங்க..பத்து நிமிடம் நின்று போவோம்..ஓண்ணும் அவசரமில்லை.மதுரை வரைக்கும் உங்க உதவியாளர் ஓட்டிட்டு வரட்டும் என்றார்.
டிரைவரும் சரி என்று எழுந்து உதவி டிரைவர் இருக்கைக்கு வந்தார்.அலுப்பாக இருந்ததால் இருக்கையில் சாய்ந்து படுத்துக்கொண்டார். உதவி டிரைவர் எழுந்து டிரைவரின் இருக்கைக்கு சென்று அமர்ந்தார். பத்து நிமிடம் எங்கும் அமைதியாக இருந்தது.பின்னர் உதவி டிரைவர் பஸ்சை ஸ்டார்ட் பண்ணினார்.பஸ் ஒரு குலுக்கலுடன் புறப்பட்டு சென்றது. கண்ணாயிரம் பூங்கொடியிடம் ஏலக்காய் டீ எடு..கொஞ்சம் முறுக்கு சாப்பிட்டு குடிப்போம் என்றார்.
பூங்கொடி பையைத்திறந்து முறுக்கு பாக்கெட்டை எடுத்து ஒரு முறுக்கை எடுத்து கண்ணாயிரத்திடம் கொடுத்தார்.அவர் முருக்கை கடித்தவாறு ஏலக்கா டீயை குடித்தார்.ஆஹா…பேஷ்..பேஷ் என்னா ருசி என்றவாறு கம்பிவளைந்த குடையை தெரியாமல் தட்டினார். கீச் என்று ஒரு குரல் கேட்டது.என்ன கம்பிவளைந்தா இப்படி சத்தம் கேட்குமா..பூங்கொடிக்கு சத்தம் கேட்காம இருக்கணும்..என்று நகர்ந்து உட்கார்ந்தார். மறுபடியும் கீச் என்று குரல் கேட்க கண்ணாயிரத்துக்கு வியர்த்தது. பூங்கொடி என்னங்க..குடைக்குள்ளிருந்து சத்தம் என்று கேட்க..கண்ணாயிரம் அதுவா..பஸ் வேகமா போகுதா..அதான் கீச் கீச் என்று கேட்கு…வேற ஒண்ணும் இல்லை என்று சமாளித்தார். அப்போது மீண்டும் கீச் கீச் என்ற குரல் எதிரொலிக்க…என்னங்க சத்தம் என்று பூங்கொடி மீண்டும் கேட்க..அது புது டிரைவருக்கு பஸ்சை சரியா ஓட்டத்தெரியல..அங்கேயும் இங்கேயும் ஆட்டி ஆட்டி ஓட்டுறதால பஸ் கீச்குச் என்று சத்தம் போடுது. பழைய வண்டின்னாலே அப்படித்தான்.சத்தம் போட்டுக்கொண்டே இருக்கும்.என்ன செய்யுறது.என்றவாறு கண்ணாயிரம் குடையை பார்த்தார். அது லேசா அசைவது போலிருந்தது.என்ன இருட்டிலே கம்பிவளைந்த குடை ஆடுது..என்றவாறு குடையை உற்றுப்பார்த்தார்.
இந்த பஸ் வேகமா போறதுதான் காரணம் என்று கண்ணாயிரம் நினைத்தபோது சாய்த்துவைத்த குடை மேலும் ஆடியது.ஏன் இப்படி ஆடுது என்றவாறு குடையை மேல தட்டியபோது உள்ளே ஏதோ குடு குடுன்னு ஓடுவது தெரிந்தது. கண்ணாயிரத்துக்கு பயம் தொற்றிக்கொண்டது.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.

r

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.