பாவூர்சத்திரம் அருகே திருமணத்திற்கு வற்புறுத்தியதால் இளம்பெண் தற்கொலை
1 min read
A young girl commits suicide due to being forced into marriage near Bhavoorchatram
28.2.2023
பாவூர்சத்திரம் அருகே திருமணத்திற்கு வற்புறுத்தியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
திருமண ஏற்பாடு
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கல்லூரணி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் பிரியா (வயது 24). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் பிரியாவிற்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் பிரியாவிற்கு அதில் உடன்பாடு இல்லாததால் கடந்த 24-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயக்கம் அடைந்தார்.
சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த பெற்றோர், பிரியா மயக்கநிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
நேற்று மாலை சிகிச்சை பலனளிக்காமல் பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.