“தமிழ்நாட்டு பெண்கள் பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துவேன்” – குஷ்பு பேட்டி
1 min read
“I will focus more on Tamil Nadu women’s issues” – Khushbu Patti
28/2/2023
டெல்லியில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக, குஷ்பு பதவியேற்றுக்கொண்டார். அவர் கூறும்போது தமிழக பெண்கள் பிரச்சினையில் அதிக கவனம் செலுத்துவேன் என்று குறிப்பிட்டார்.
குஷ்பு
டெல்லியில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக, குஷ்பு பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவர், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உலகளவில் இருந்தாலும், இந்தியாவில் அதிகளவில் உள்ளதாக வேதனை தெரிவித்தார். மேலும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க, தன்னால் முடிந்ததை செய்வேன் என உறுதி அளித்த அவர், தமிழ்நாட்டு பெண்களின் பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துவேன் என்றும் தெரிவித்தார்.