தாழ்வாக சென்ற மின் கம்பியில் சிக்கி வாலிபர் பலி
1 min read
A teenager died after getting caught in a low power line
1.3.2023
திருவள்ளூரில் தாழ்வாக சென்ற மின்கம்பியில் சிக்கி வாலிபர் ஒருவர் இறந்தார்.
மின்கம்பி
திருவள்ளூர் ஏரிக்கரை பகுதியை சார்ந்த சந்திரன் (வயது 37). இவர் பன்றி வளர்ப்பு தொழிலை செய்து வருகிறார். தனது பன்றியை தேடுவதற்காக திருவள்ளூர் பஸ் நிலையம் அருகே உள்ள எம்ஜிஎம் நகர் பகுதிக்கு சென்றுள்ளார். அங்குள்ள கம்பரான் குட்டை பார்வையிடுவதற்காக மதில் சுவரில் ஏறியுள்ளார்.
மதில் சுவர் மேலே தரையில் இருந்து சுமார் எட்டடி உயரத்தில் லவன் கேபி மின் கம்பியில் தலைப்பட்டு அங்கிருந்து தூக்கி குட்டையில் வீசப்பட்டார். இதனைப் பார்த்த பொதுமக்கள் குட்டையில் இருந்து மீட்டபோது சம்பவ இடத்திலேயே இறந்திருந்தார்
இச்சம்பவத்தைக் குறித்து வார்ட் கவுன்சிலர் பாபு திருவள்ளூர் நகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பிரேதத்தை மீட்டு திருவள்ளூர் தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
இறந்தவருக்கு திருமணமாகி நாகம்மாள் என்ற மனைவியும் ஜனனி என்ற மகளும் ராஜி என்ற மகனும் ஜானகி என்ற மகளும் உள்ளனர்
இவர் இறந்ததற்கான காரணம் தாழ்வாக சென்று கொண்டிருக்கின்ற மின்கம்பியே என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் மேலும் அவ்விடத்தில் உயிர் சேதங்களை தவிர்க்க பின் கம்பியை உயரத்தில் கட்ட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.