தமிழ்நாட்டில் சாலைகளை சீரமைக்க 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு- அமைச்சர் ஐ. பெரியசாமி தகவல்
1 min read
4000 crore allocation for repairing roads in Tamil Nadu- Minister I. Periyasamy information
14.3.2023
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி நேற்று தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அப்போது தமிழ்நாட்டில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகளை சீரமைக்க ரூபாய் 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
ஐ. பெரியசாமி
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தென்காசி மாவட்டம் வருகை தந்த தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தென்காசி, கடையம், கீழப்பாவூர், வாசுதேவநல்லூர், கடையநல்லூர் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய பகுதிகளைச் சார்ந்த 10 ஊராட்சிகளுக்கு ரூபாய் 45.2 லட்சம் மதிப்பில் தூய்மை பாரத இயக்கம் பகுதி இரண்டில் 20 23 திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் டிராக்டர்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு அமைச்சர் ஐ. பெரியசாமி பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-
ரூ.800 கோடி
தமிழகத்தில் ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடங்களை சீரமைக்க ரூபாய் 800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அதன்படி காற்றோட்டமான வசதி விசாலமான வராண்டா மற்றும் காற்றோட்டமான வகுப்பறைகள் கூடிய உயரமான கட்டிடங்கள் மாணவர்களின் சிறப்பான கல்வியை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாளர்களை தேர்வு செய்வதற்கும், பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், அவர்களுக்கு வேலை வழங்குவதை உறுதி செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிராமப்புறங்களில் சாலை வசதியை மேம்படுத்தும் வகையில் கிராம சாலைகளை இணைக்கும் வகையில் முதலமைச்சர் கிராம சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக தமிழகத்தில் 10 ஆயிரம் கிலோமீட்டர் சாலையை சீரமைக்க ரூபாய் 4000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தென்காசி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 16 சாலைகள் சீரமைக்கப்பட உள்ளது. தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 14 ஊராட்சிகளில் பெரும்பாலான ஊராட்சிகள் நகர்ப்புறங்களை ஒட்டி அமைந்துள்ளது இந்த ஊராட்சி பகுதிகளில் சில குறைகள் இருப்பதாக தெரிவித்தனர். அவற்றை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் பொது மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் அத்தியாவசியமான பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டம் முத்தம்மாள்புரம் பகுதியில் கடந்த ஆண்டு கன மழை பெய்த போது 23 நாட்கள் அந்த பகுதி மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு தண்ணீர் தேங்கி தவித்துள்ளனர் அந்த பகுதியில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்துள்ளார் அது பற்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழகம் முழுவதும் இதுவரை சாலைகளை சீரமைக்க அதிகபட்சமாக 600 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இப்போது 4000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மேலும் நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடிநீர் வசதி சாலை வசதிகள் செய்து கொடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார் .
கடந்த இரண்டு ஆண்டுகளில் நல்ல மழை பெய்துள்ளது எனவே குடிநீர் தட்டுப்பாடு வராது என்று நம்புகிறோம் .மேலும் அதிக அளவில் கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.குடிநீர் தேவை அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு மேலும் குடிநீர் திட்டங்கள் விரிவு படுத்தப்படும் .
ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் நீர் தேக்க தொட்டி இயக்குனர்கள் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன், தென்காசி மாவட்ட
ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பிரான்சிஸ் மகாராஜன், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் ஈ.ராஜா எம்எல்ஏ, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் தி சதன் திருமலைக்குமார்,
, தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி, தென்காசி மாவட்ட ஊராட்சி துணை தலைவர் ஆயிரப் பேரி தி. உதய கிருஷ்ணன்,
தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வல்லம் மு.ஷேக்அப்துல்லா தென்காசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மா.மாணிக்கவாசகம் செ.குழந்தை மணி, துணைத்தலைவர் கனகராஜ், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆ.கலாநிதி, கா.ப்ரியா, ஆர்.எம்.அழகுசுந்தரம் இரா.செல்வநாயகம், ரா.வினோதி இராமையா ச.மல்லிகா சரவணன், ஆ.சுப்புலட்சுமி ஆனந்தராஜ் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லம் எம் திவான் ஒலி தென்காசி நகர மன்ற தலைவர் ஆர் ஆர்.சாதிர், துணைத் தலைவர் கே என் எல் சுப்பையா, செங்கோட்டை நகர திமுக செயலாளர் வழக்கறிஞர் ஆ.வெங்கடேசன் செங்கோட்டை ஒன்றிய குழு தலைவர் திருமலைச்செல்வி, கீழப்பாவூர் ஒன்றிய குழு தலைவர் காவேரி சீனித்துரை ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன், கடையம் செல்லம்மாள் கடையநல்லூர் சுப்பம்மாள் மாவட்ட அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம் மாவட்ட பொருளாளர் ஷெரிப், மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் க.கனிமொழி, ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் எம் பி எம் அன்பழகன் பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் மாரி வண்ணமுத்து, முன்னாள் ஒன்றிய செயலாளர் பா.துரை (எ) இராமையா, மாவட்ட உதயநிதி மன்றத் துணைச் செயலாளர் சிவ அருணன், திமுக பேரூர் செயலாளர்கள் மேலகரம் இ.சுடலை, பண்பொழி கரிசல் அ.இராஜராஜன், சுந்தரபாண்டியபுரம் வே.பண்டாரம், குற்றாலம் குட்டி, வெள்ளத்துரை, வடகரை தங்கப்பா, சாம்பவர் வடகரை முத்து, மாவட்ட அணி அமைப்பாளர்கள் வழக்கறிஞர் வேலுச்சாமி, வே கோமதிநாயகம், அ.ஜீவானந்தம், காங்கிரஸ் நிர்வாகிகள் எஸ்.ஆர்.பால்துரை,
மாடசாமி ஜோதிடர், சுப்பிரமணியன், ஏஜிஎம்.கணேசன், கண்ணன், ஈஸ்வரன், முருகன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.