விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த எம்எல்ஏ ராஜா
1 min read
MLA Raja rescued the accident victims and admitted them to the hospital
தென்காசி, மார்ச் – 14
தென்காசி மாவட்டம் சிவகிரி வாசுதேவநல்லூர் அருகே அருகே விபத்தில் சிக்கிய 18 பேரை சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
விபத்து
சென்னையில் நடைபெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட தென்காசி மாவட்ட அங்கன்வாடி ஊழியர்கள் தென்காசி பகுதிக்கு திரும்பி வந்து கொண்டிந்தனர்.
வாசுதேவநல்லூர் அருகே அருளாச்சி விலக்கில் அருகே வந்தபோது அவ்வழியாக வந்த டிராக்டர் வாகனத்திற்கு வழி விடும்போது வேனானது நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
இது குறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவல் பேரில் வாசுதேவநல்லூர் போலீசார் வாசுதேவனுக்கு தீயணைப்பு படை வீரர்கள் விரைவாக வந்தனர் இந்த நிலையில் காரில் பயணித்த 17 நபர்களும் ஓட்டுநர் ஒருவர் என மொத்தம் 18நபர்கள் படுகாயம் அடைந்தனர்.
எம்.எல்.ஏ.
அப்போது அந்த வழியாக சென்ற சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ ராஜா தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் ராசா வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், மாவட்டத் துணைச் செயலாளர் மனோகரன் வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பூசை பாண்டியன், விஜய பாண்டியன், அவரது ஆதரவாளர்கள் காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.
காயம் அடைந்த 18 பேர்களில் 14 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் மேற்குள்பட்டு உடனடியாக வீடு திரும்பினார் நான்கு பெயர்களை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்
இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
விபத்தில் சிக்கிய அங்கன்வாடி பணியாளர்களை உடனடியாக மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான வழக்கறிஞர் ஈ.ராஜா மற்றும் திமுக நிர்வாகிகளை பொதுமக்கள் பாராட்டினார்கள்.
”