June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம் 2 பேர் கைது

1 min read

2 people arrested for kidnapping and raping a girl in Tenkasi

16.3.2023
தென்காசியில் சிறுமியை ஆட்டோவில் கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்த இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர் மேலும் ஒருவரை வலை வீசி தீவிரமாக தேடி வருகிறார்கள்.

சிறுமி கடத்தல்

தென்காசி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பெண் ஒருவர் சம்பவத்தன்று இரவு செங்கோட்டை காவல் நிலையம் அருகே செல்போன் கடை ஒன்றின் தனது செல்போனை பழுது பார்ப்பதற்காக கொடுத்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார்.

அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த மூன்று பேர் ஆட்டோவில் ஏறுமாறும் வீட்டில் இறக்கி விடுவதாகவும் கூறியுள்ளனர் அதனை நம்பி அந்தப் பெண் ஆட்டோவில் ஏறி உள்ளார் ஆனால் அந்த ஆட்டோ அவரது வீட்டிற்கு செல்லவில்லை இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் இது குறித்து அவர்களிடம் கேட்டுள்ளார் அப்போது அவரது வாயில் துணியை அழுத்தி கட்டி அவரை கடத்திச் சென்றுள்ளனர்.

பாலியல் பலாத்காரம்

அதனைத் தொடர்ந்து அந்த ஆட்டோ தென்காசி – செங்கோட்டை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள ஒரு மறைவான இடத்திற்கு அந்தப் பெண்ணை கொண்டு சென்று மூவரும் கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் தென்காசி செங்கோட்டை சாலை சீவலப்பேரி குளம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அந்த பெண்ணை இறக்கி விட்டு விட்டு மூன்று பேர்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர.
அப்போது அங்கு வலி தாங்க முடியாமல் மிகவும் களைப்புடன் வந்த பெண்ணை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விசாரித்தனர். அப்போது மூன்று பேர் சேர்ந்து தன்னை கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.

உடனடியாக அந்தப் பெண்ணை தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

கைது

மேலும் தென்காசி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த பெண் கூறிய தகவலின் படி தென்காசி கீழ வாலிபன் பொத்தை பகுதியைச் சார்ந்த தங்கத்துரை என்பவரது மகன் விஜி என்ற அந்தோணி (வயது 20) தென்காசி தைக்கா தெருவை சேர்ந்த சுடலைமுத்து என்பவரது மகன் மாதவன் (வயது 33) அதே பகுதியைச் சார்ந்த வெங்கடேஷ் (வயது 34) ஆகிய மூவரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து தென்காசி அனைத்து மகளிர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து ராஜி மற்றும் மாதவன் ஆகிய இருவரையும் உடனடியாக கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய வெங்கடேசை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள் இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *