June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

கேரளாவிள்கு கனிம வளம் கடத்தல் 8 லாரிகளுக்கு அபராதம்

1 min read

8 trucks fined for smuggling minerals from Kerala

16/3/2023
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு தென்காசி செங்கோட்டை புளியரை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான டாரஸ் வாகனங்களில் கனிம வளங்கள் கடத்தப்படும் நிலையில் தென்காசி போலீசார் அந்தக் டாரஸ் லாரிகளை வழிமறித்து சோதனை நடத்தி அதிக பாரம் ஏற்றிவந்த டாரஸ் லாரிகளுக்கு அபராதம் விதித்தனார்.

கனிம வளம்

கேரளாவில் கட்டப்பட்டு வரும் தனியார் விமான நிலைய கட்டுமான பணிக்காக தமிழகத்தில் இருந்து நாள்தோறும் கனரக டாரஸ் லாரிகளில் விதிகளுக்கு புறம்பாக கனிம வளங்களை ஏற்றுக் கொண்டு கேரளாவிற்கு லாரிகள் அணிவகுத்துச் செல்கின்றன இது பற்றி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் நாள்தோறும் குற்றம் சாட்டி வருகின்றனர்
தென்காசி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. ரவி அருணன், தொழில் அதிபர் டாக்டர்.ச.அய்யாதுரை பாண்டியன் புளியரை ஜமீன், சமூக ஆர்வலர் இராம.உதயசூரியன் உள்ளிட்ட பல்வேறு சமூக ஆர்வலர்களும் இதனை கண்டித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் தென்காசி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையில் பல்வேறு பகுதிகளில் போலீசார் கனிம வளங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களில் அதிக பாரங்கள் ஏற்றி செல்வதை கண்டறிந்து உடனடியாக அந்த டாரஸ் லாரிகளை வழிமறித்து சோதனை நடத்தி அதிரடியாக
அபராதம் விதித்தார்.

அதன்படி செங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையில் போலீசார் செங்கோட்டை அருகே பிரானூர் பார்டரில் வாகன சோதனை செய்தனர். அப்போது கேரளாவுக்கு கனிமளங்கள் ஏற்றி வரிசையாக வந்த கனரக டாரஸ் லாரிகளை அதிரடியாக நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அளவுக்கு அதிகமாக கனிமவளங்களை ஏற்றி வந்து இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அதிக பாரம் ஏற்றி வந்த 8 கனரக டாரஸ் லாரிகளுக்கு ரூ.1 லட்சத்து 83 ஆயிரத்து 550 அபராதம் விதித்தனர்.
ஏற்கனவே தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை கொண்டு செல்லும் லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு அந்த லாரிகளில் உள்ள அதிக அளவு கனிம வளங்களை பறிமுதல் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் தனியார் விமான நிலையம் கட்ட கேரள மாநிலத்தில் உள்ள கனிம வளங்களை பயன்படுத்தாமல் அண்டை மாநிலமான தமிழகத்தில் உள்ள கனிம வளங்களை கனரக டாரஸ் லாரிகள் மூலம் சட்டவிரோதமாக கனிமங்கள் கடத்தப்படுவதை தென்காசி மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் அதனை தடுத்து நிறுத்த உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *