June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தி.மு.க. கவுன்சிலர் கைது

1 min read

Sexual harassment of a minor; DMK Councilor arrested

12.4.2023
வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விருத்தாச்சலம் நகராட்சி தி.மு.க. கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.

கவுன்சிலர்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் சக்தி நகரில் நர்சரி பள்ளி நடத்தி வருகிறார். மேலும் விருத்தாசலம் நகராட்சியின் 30-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராகவும் இருந்து வருகிறார்.
பக்கிரிசாமி தனது பள்ளியில் படித்து வரும் 6-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் சிறுமி பாலியல் பலாத்காரம் உறுதி செய்யப்பட்டது.

கைது

இதனை தொடர்ந்து பக்கிரிசாமியை மகளிர் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட பக்கிரிசாமி தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டு உள்ளார்.
6-வயது சிறுமியை பலாத்காரம் செய்த தி.மு.க. கவுன்சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *