கீழக்கடையத்தில் 70 மரக்கன்று நடும் விழா
1 min read
Planting ceremony of 70 saplings in kadayam
13.4.2023
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் கீழக்கடையம் ஊராட்சி பகுதியில் கடையம் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே சாலை ஓரத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு 70 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கடையம் சப் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
கீழக்கடையம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சமுத்திரகனி, வசந்த், காளியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் ஜெய சக்திவேல் வரவேற்றார்.
அதனைத்தொடர்ந்து கீழக்கடையம் ஊராட்சி மன்றத் தலைவர் பூமிநாத் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள்
கடையம் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே சாலை ஓரத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு 70 மரக்கன்றுகளை நட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணித்தள பொறுப்பாளர்கள் ரஞ்சித் ராணி, அம்பிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கீழக்கடையும் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் அனைவருக்கும் நன்றி கூறினார்.