தென்காசியில் மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் 11 தீர்மானங்கள்
1 min read11 Resolutions in District Panchayat Meeting in Tenkasi
24.5.2023
தென்காசி மாவட்ட பஞ்சாயத்து குழு சாதாரண கூட்டம் நேற்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறு கூட்டரங்கில் வைத்து நடத்தப்பட்டது.
இதில் 11 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சு.தமிழ்செல்வி தலைமை தாங்கினார்.மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி செயலர் பா.ராம்லால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கடங்கனேரி ஊராட்சியில் ரூபாய் 8 லட்சம் செலவில் நீலகண்ட சாஸ்தா கோவில் அருகில் தடுப்புச் சுவர் கட்டுதல், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கடந்தனேரி ஊராட்சி வெங்கடேஸ்வரம் பகுதியில் ரூபாய் 4.75 லட்சம் செலவில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைத்தல்,
தென்காசி ஊராட்சி ஒன்றியம் காசி காசிமேஜர்புரம் ஊராட்சி சுப்பிரமணிய சுவாமி கோவில் வடக்கு தெருவில் ரூபாய் 6.95 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைத்தல் உள்ளிட்ட 11 தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் சந்திர லீலா, மதிமாரிமுத்து, க.கனிமொழி, சுதா, மைதீன் பீவி, சுப்பிரமணியன், சாக்ரட்டீஸ் ,ராஜா தலைவர், முத்துலட்சுமி, தேவி, பூங்கொடி, ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உதவிப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.