May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

அரக்கோணத்தில் பாஜக சமுக ஊடகவியலளர்கள் சந்திப்பு கூட்டம்

1 min read

BJP social media meeting at Arakkonam

27.6.2023
அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதியில் பாரதீய ஜனதாவின் சமூக உடகவியலாளர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது-

பாஜக

ராணிப்பேட்டை மாவட்டம் பாஜக தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு சார்பில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி சந்திப்பு கூட்டம் அரக்கோணம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமுக ஊடக பிரிவு தலைவர் அரவிந்த் தலைமை தாங்கி பேசினார். துணை தலைவர் சுரேஷ்குமார் வரவேற்று பேசினார்.
வழக்கறிஞர்கள் கண்ணன், தனசேகரன், பிற மொழி மாவட்ட தலைவர் ஜெகன் மற்றும் புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ராணிப்பேட்டை மாவட்ட பாஜக தலைவர் அரக்கோணம் விஜயன் சிறப்பு அழைப்பாளராக தொழில் பிரிவு மாநில தலைவர் செல்வகுமார், ஒ.பி.சி. அணி மாநில துணை தலைவர் பழனிச்சாமி, சமூக ஊடக பிரிவு மாநில செயலாளர் ராஜ்மனோகர் ஆகியோர் பேசினார்கள்.
மக்கள் பேரிடர் மேலாண்மை பார்வையாளர் மாநில செயற்குழு உறுப்பினர் தசரதன், வேலூர் கோட்ட பொறுப்பாளர் வெங்கடேசன், ஜிவி.பிரகாஷ், தணிகாசலம் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த சந்திப்பு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்த தாக கருதபடுகிறது.
இந்த கூட்டத்தில் . அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
-சுரேஷ்குமார், நிருபர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.