June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆடி தபசு-தென்காசி மாவட்டத்தில் 31ம் தேதி உள்ளுர் விடுமுறை

1 min read

31st local holiday in Aadi Tapasu-Tenkasi district

25.7.2023
தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 31ம் தேதி ஆடித்தபசு திருநாளை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

ஆடி தபசு

ஆடித்தபசு திருநாள் 31.07.2023 திங்கள் கிழமை அன்று நடைபெறுவதை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதேனுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது. மேலே குறிப்பிட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 19.08.2023 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *