புளியங்குடியில் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம்
1 min read
Free eye care medical camp at Puliangudi
15.8.2023
தென்காசி மாவட்டம் புளியங்குடி திருஞானசம்பந்தர் நடுநிலைப் பள்ளியில் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன், புளியங்குடி மருதம் மாடசாமி கலைவாணி தொண்டு அறக்கட்டளை , இணைந்து, சங்கரா கண் மருத்துவமனை இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாமை நடத்தியது.
இந்த முகாமிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்துறை சுந்தர் ராஜ், மருதம் தொண்டு அறக்கட்டளை நிறுவனர் முகேஷ் சிங் மாடசாமி தலைமை வகித்தார்.
திருஞானசம்பந்தர் நடுநிலைப் பள்ளி ஆசிரியர் கணேஷ், புளியங்குடி தொழிலதிபர் மாடசாமி , ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி வருவாய் துறை அதிகாரி அருண்குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் அ.ஆனந்தன் கலந்து கொண்டு இலவச கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது :-
சுமார் 6 1/2 கோடிக்கு மேலாக இந்தியாவில் கண் நோயாளிகள் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு கோடி மக்கள் கண் பார்வை இழந்து இருக்கிறார்கள். உலகத்திலேயே அதிக கண் நோய் பாதிப்பு நாடாக இந்தியா இருக்கிறது.
அப்படி இருந்தும் கண் மருத்துவர்கள் தேவையில் இந்தியாவில் 5-ல் ஒரு மடங்கு தான் கண் மருத்துவர்கள் இருக்கிறார்கள் .குறிப்பாக கிராமப்புறத்திலும், சிறு நகரங்களிலும் கண் மருத்துவர்கள் இருப்பு மிகவும் குறைவாக உள்ளது. ஆதலால் தொண்டு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும், சுதந்திர தினம் போன்ற நல்ல தினங்களை கொண்டாடும் போது இது போன்று கண் சிகிச்சை முகாம்களை நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்கள் நலம் காக்க வேண்டும் என்று பேசினார்.
இது முகாமில் கலந்து கொண்டு பரிசோதனை செய்த அனைவருக்கும் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி அவரவர் தங்கள் இல்லத்தில் கட்டுவதற்காக வழங்கப்பட்டது. இதில் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். இந்நிகழ்ச்சியில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிர்வாகிகள் மற்றும் மருதம் தொண்டு நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மருதம் தொண்டு நிறுவன நிர்வாகி கிருஷ்ணகுமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.