மதுரை அதிமுக மாநாட்டுக்கு தென்காசியில் இருந்து 700 வாகன ங்களில் செல்ல முடிவு
1 min read
It was decided to go to Madurai AIADMK conference in 700 vehicles from Tenkasi
15.8.2023
ஆகஸ்ட் 20 அன்று மதுரையில் நடைபெற உள்ள அதிமுக எழுச்சி மாநாட்டில் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் 700 வாகனங்களில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்று கலந்து கொள்ள தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாக மாவட்ட அதிமுக செயலாளர் செ.கிருஷ்ண முரளி எம்எல்ஏ தெரிவித்துள்ளார்
அ.தி.மு.க. மாநாடு
தென்காசி வடக்குமாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மதுரை மாநாடு சம்பந்தமான ஆலோசனைக்
கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான
செ.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா தலைமை தாங்கினார். அதிமுக மகளிரணி துணை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி எம் ராஜலட்சுமி முன்னிலைவகித்தார். மாவட்ட பொருளாளர் சண்முகையா அனைவரையும் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து மாவட்ட கழக செயலாளர் செ.கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா பேசியதாவது;-
வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு என்ற மாபெரும் சகாப்தத்தினை படைக்க கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் அழைப்பிற்கிணங்க அனைவரும் சொந்த பந்தங்கள் உற்றார் உறவினர்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.
அன்றைய தினம் விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவு தினம் உள்ளது அதிகாலையில் அவருடைய நினைவிடம் சென்று அதிமுக சார்பில் மரியாதை செலுத்திய பின்னர் மாநாட்டிற்கு வாகனங்களில் அணிவகுத்து செல்ல வேண்டும். ஒவ்வொரு ஒன்றிய, நகர, பேரூர் கழகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாகனங்களில் அனைவரும் பாதுகாப்புடன் பயணம் செய்து மாநாடு சென்று வரவேண்டும் வாடகை கார், வேன், லாரி மற்றும் சொந்த உபயோக வாகனங்கள் என சுமார் 700 வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.
ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒவ்வொரு பொறுப்பாளர் நியமனம் செய்து அவர்களுடன் வாகனத்தில் பயணிப்பவர்கள் தொடர்பில் இருக்க வேண்டும். ஒரு சேர சென்று மாநாட்டினை சிறப்பு செய்து ஒரு சேர ஊருக்கு வந்து பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும். மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதிகள் அனைவருக்கும் கிடைத்திட பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்திட வேண்டும். சில சுயநலவாதிகள் தடை இருந்தாலும் தடையை உடைத்து வெற்றி ஆக்க பாடுபடுவதே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டனுக்கு பழக்கம்.
அதையே தற்போது செய்திடுவோம் மாநாட்டை வெற்றி அடைய செய்து கழகம் ஆட்சிக்கட்டிலில் அமர முதல்படி எடுத்து வைத்திடுவோம் என்று தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளர் பொய்கை சோ மாரியப்பன் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் முனைவர் சிவ. ஆனந்த், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் ராமையா மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன் ஒன்றிய செயலாளர்கள் வல்லம் எஸ் ஆர் ராமசந்திரன், ஆய்க்குடி கே.செல்லப்பன், வசந்தம் முத்துபாண்டியன், ஜெயகுமார், ரமேஷ், மகாராஜன், செல்வராஜ், வேல்முருகன், வாசுதேவன், நகர செயலாளர்கள் கணேசன், ஆறுமுகம், எம் கே முருகன், பரமேஸ்வர பாண்டியன் பேரூர் கழக செயலாளர்கள் டாக்டர் சுசீகரன், முத்துகுட்டி, நல்லமுத்து, கார்த்திக்ரவி, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஞானராஜ், ஜாஹீர் உசேன், தனபால், வழக்கறிஞர் அருண், அண்ணா தொழிற்சங்கம் முத்துராமன், முன்னாள் செயலாளர்கள் முத்தழகு, சங்கரபாண்டியன் உள்ளாட்சி பிரதிநிதிகள் சங்கரசுப்பிரமணியன், சத்யகலா கூட்டுறவு சங்க தலைவர் வேல்சாமி, சங்கரன்கோவில் நகர அம்மா பேரவை செயலாளர் செளந்தர் எ ஷாகுல் ஹமீது, டாக்டர் திலீபன், செந்தில்குமார், ராஜ்குமார், குருசேவ், இடைகால் செல்லப்பா, சந்திரகுமார், பேச்சாளர் தீக்கனல் லெட்சுமணன் மற்றும் கழக நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனர்