August 13, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் சுதந்திர தின விழா- ஆட்சியர் தேசிய கொடியேற்றினார்

1 min read

INDEPENDENCE DAY CELEBRATION AT TENKASI- Collector Hoisted National Flag

15.8.2023
தென்காசியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் தேசிய கொடியேற்றி வைத்தார்.

சுதந்திர தினம்

தென்காசி ஐ.சி.ஐ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.ரவிச்சந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகியும் முன்னாள் அரசு துறை செயலாளருமான லட்சுமிகாந்தன் பாரதிக்கு மாவட்ட ஆடசித்தலைவர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் வெள்ளை நிற புறாக்கள் மற்றும் பலூன்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பறக்கவிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, சட்டமன்ற உறுப்பினர்கள் தென்காசி பழனி நாடார், சங்கரன்கோவில் வழக்கறிஞர் ஈ. ராஜா, தென்காசி கோட்டாட்சி தலைவர் லாவண்யா, டிஎஸ்பி நாக சங்கர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.எஸ்.ஆர்.வேங்கடரமணா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ்,, மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி.உதய கிருஷ்ணன், ஆய்க்குடி அமர் சேவா சங்க தலைவர் ராமகிருஷ்ணன், மற்றும் அனைத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில்
மாற்றுத்திறனாளிகள் இருவருக்கு பேட்டரி ஸ்கூட்டர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.ரவிச்சந்திரன் வழங்கினார். இதன் பின்னர் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நற்சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும் அனைத்து அரசுத் துறைகளிலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *