மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆவணங்கள் மாயம்- ஊழியர் உள்பட 3 பேர் கைது
1 min read3 persons including employee arrested for falsification of documents in Madurai High Court branch
3.9.2023
மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆவணங்கள் மாயமானது. இதுதொடர்பாக நீதிமன்ற ஊழியர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆவணங்கள் மாயம்
உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்பான ஆவணங்கள் தனித்தனி அறைகளில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் முறையாக பராமரிப்பதற்காக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குற்றவியல் வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் காணாமல் போனதாக அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் நீதிமன்ற பதிவாளரிடம் தெரிவித்தனர். இதையடுத்து நீதிமன்ற பதிவாளர் உயர்நீதி மன்ற போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன்பேரில் நீதிமன்ற ஊழியர் ஜான்சன் மற்றும் பாலமுருகன், பிரித்திவிராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.