May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

97.26 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன- ரிசர்வ் வங்கி தகவல்

1 min read

97.26 percent of Rs 2000 notes have been withdrawn- RBI data

1.12.2023
நாட்டில் புழக்கத்தில் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி கடந்த மே 19-ம் தேதி அறிவித்தது. அதன்படி பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றி வந்தனர்.

இதையடுத்து, அக்டோபர் 7-ம் தேதி முதல் ரிசர்வ் வங்கியில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் வரை சுமார் 3.54 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளன. 97.26 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன எனவும், 2000 ரூபாய் நோட்டுகள் சட்டப்படி செல்லும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.