May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு செய்தது என்ன? -மு.க.ஸ்டாலின் கேள்வி

1 min read

What did the central government do to Tamil Nadu? -MK Stalin’s question

5/51.2025

5.1.2024
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசின் பேட்டியை பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், தெரிவித்து இருப்பதாவது:-

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கமும் வழங்கி இந்த இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கிடத் துணை நிற்கிறது நமது திராவிட மாடல் அரசு. ஆட்சி அமைந்தது முதல், மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மாதம் 1,000 ரூபாய் அளவுக்கு செலவில் மிச்சம், காலை உணவுத் திட்டம் மூலம் பணிச்சுமைக் குறைப்பு, புதுமைப் பெண் திட்டத்தின் மூலமாக மாதம் 1,000 ரூபாய், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் எனப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசின் நிதியினைக் கொண்டு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது திராவிடமாடல் அரசு.
இந்திய மாநிலங்களின் நலன் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்காகச் செய்தது என்ன? மத்திய நிதியமைச்சரின் பேச்சுக்கு விரிவான பதில் தந்திருக்கிறார் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு” என்று தெரிவித்து உள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  • பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கி வருகிறோம்.
  • மகளிர் உரிமைத் தொகை திட்டம் 1 கோடியே 13 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
  • கொரோனா உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை அரசு திறமையாக கையாண்டுள்ளது.
  • மாநில அரசுக்கு உதவி செய்யும் வகையில் மத்திய அரசு எதுவும் செய்யவில்லை.
  • நம்மிடம் இருந்து செல்லும் ஒரு ரூபாய்க்கு 29 பைசாதான் திரும்ப வருகிறது.
  • சில மாநிலங்களுக்கு அதிகமான வரி வருவாய் கொடுக்கப்படுகிறது.
  • பா.ஜ.க.ஆளும் மாநிலங்களுக்கு அதிக வரி பகிர்வு மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
  • தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய உரிய நிதிகள் மத்திய அரசிடம் இருந்து கிடைப்பதில்லை.
  • மறைமுக வருவாய் குறித்து மத்திய நிதி அமைச்சர் எதுவும் தெரிவிக்கவில்லை.
  • நிதி பற்றாக்குறை 20 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.
  • மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு நடப்பாண்டு, மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. இத்திட்டத்திற்கு வெறும் 3,273 கோடி ரூபாய் தான் மத்திய அரசு கொடுத்துள்ளது.
  • உ.பி., கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்கு மெட்ரோ திட்டங்களுக்கு உரிய நிதி கொடுக்கப்பட்டுள்ளது.
  • கிராமப்புற வீடு வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு கொடுக்கும் நிதியை விட மாநில அரசு அதிக நிதி கொடுக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.