May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரம் வீட்டுமுன்பு பெண்கள் ஒப்பாரி /நகைச்சுவை கதை/தபசுகுமார்

1 min read

In front of Kannairam’s house, the women are compared /Comedy story/Tapaskumar

6.1.2024
கண்ணாயிரம் பாளையங்கோட்டையிலிருந்து வாடகை காரில் அதிகாலையில் மனைவியுடன் புதுவை வந்தார். ஜன்னலை திறந்துவைத்துவிட்டு கொசுக்கடிக்கு பயந்து உடம்பு முழுவதும் வேட்டியைச் சுற்றிக்கொண்டு கட்டிலில் வாய்பிளந்து படுத்து தூங்கினார்.
இந்த நிலையில் கண்ணாயிரத்துக்கு இதய அஞ்சலி போஸ்டர் ஒட்டியிருந்ததால் அவர் போய்விட்டதாக நினைத்த நண்பர்கள் தாரை தப்பட்டை மற்றும் டிரம்ஸ் முழங்க அவரது வீட்டை நோக்கிவந்தார்கள்.
தனது பிறந்த நாளுக்குத்தான் மாலை போட வருகிறார்கள் என்று நினைத்த கண்ணாயிரம் மகிழ்ச்சியாக எழுந்து பார்த்தார். அவரது மனைவியோ.. இதய அஞ்சலி போஸ்டரையும் டிரம்ஸ் சத்தத்தின் வேறுமாதிரியான ஒலியையும் கண்டு வேறுபாடு உணர்ந்து கத்தினார்.
சுற்றியிருக்கும் வேட்டியை கழற்றிப் போட்டுவிட்டு நல்லா சோப்பு போட்டு குளிங்க.. தாமிரபரணியில் குளிச்சும் உங்களுக்கு பீடை போகவில்லை.. குளிச்சிட்டு புத்தம் புது வேட்டி கட்டி சட்டைப் போட்டு சந்தனப் பொட்டு வச்சிட்டு சாமி கும்பிட்டுவாங்க.. உடனே வெளியே வராதீங்க.. நான் கூப்பிட்டப் பிறகுதான் வரணும்.. சரியா.. என்று பூங்கொடி சொல்ல கண்ணாயிரம் தலையை ஆட்டினார்.
அப்போது கதவை தட்டும் சத்தம் கேட்டது..ம்.. சீக்கிரம் போங்க.. நான் அவர்களை ஏதாவது சொல்லி சமாளிக்கிறேன் என்று பூங்கொடி சொல்ல கண்ணாயிரம் வேகமாக பாத்ரூமுக்குள் ஓடினார்.
பூங்கொடி கதவை திறப்பதற்குள்.. டொம்..டொம்..டொம்..என்று டிரம்ஸ் சத்தம் அதிகமாக ஒலித்தது. பூங்கொடி..என்ன அநியாயம்.. இது என்று கதவை திறக்க முயல.. வீட்டில யாரு.. கதவை திறங்க..பாடி வந்துட்டா.. இல்லையா என்றபடி ஒருவர் ஓங்கி கதவை தட்டினார்.
பூங்கொடி பற்களை கடித்தபடி.. கதவை திறந்தார். அவரைப் பார்த்ததும்.. ஏம்மா.. இப்படி ஆயிட்டம்மா.. கண்ணாயிரம் வல்லவரு நல்லவரு.. இப்படி ஆயிட்டம்மா.. நாங்க ஆஞ்சலி செலுத்திட்டுப் போறோம் என்று ஒருவர் மாலையுடன் வீட்டுக்குள் செல்ல முயல பூங்கொடி அவரைத் தடுத்தார்.
அவர்.. இல்லை என்று கத்தினார்.
அவர்தான் இல்லையம்மா. போயிட்டாரே..அதான் அஞ்சலி செலுத்த வந்தோம் என்று மற்றொருவர் சொல்ல.. பூங்கொடி கோபத்தில்.. அவர் இங்கே இல்ல.. என்று சொல்ல.. சில பெண்கள்.. கண்ணாயிரம் அண்ணாச்சி போயிட்டியளா என்று ஒப்பாரி வைத்தார்கள்.

இன்னொரு பெண் கண்ணாயிரம் இல்லையா.. நாங்க ஜன்னல் வழியாப் பார்த்தோம். வாயை கட்டாம பாடியை வேட்டியால் கட்டிவச்சிருந்ததைப் பார்த்தோமே..பாடியை எங்கே என்று அதட்டலாகக் கேட்டார்.
பூங்கொடி.உடனே..அவர் குளிக்கிறார் என்று சொல்ல ஒரு பெண்.. என்ன..பாடியை குளிப்பாட்டத்தான் செய்வாங்க.. இவா என்ன பாடியே குளிக்குது என்கிறா.. ஒரு வேளை கணவன் போயிட்டதால.. புத்தி பேதலிச்சிட்டுப் பேசுறாளா என்று மற்ற பெண்களிடம் கேட்டாள்.
அதற்கு அந்த பெண்கள்..என்னதான் கணவன் மேல பாசம் இருந்தாலும்.. பாடியை வீட்டிலாவைக்க முடியும்.. மாலை மரியாதையுடன் தூக்கிட்டுப் போய் புதைக்கத்தானே வேண்டும்..என்றனர்.
ஆமா..செய்ய வேண்டிய கடமையைச் செய்துதானே ஆக வேண்டும்.. பூங்கொடி.. மனவருத்தத்தில் ஏதோ பேசலாம்.. நாம விட்டுவிட முடியுமா.. உள்ளே போவோம் என்றனர் ஆண்கள்.
பூங்கொடி..உள்ளே வராதீங்க.. அவர் குளிக்கிறாரு என்க.. ஏம்மா .. கணவர் மீது அன்பு இருக்க வேண்டியதுதான்..அதுக்காக இப்படியெல்லாம்.. பாடியானவர் குளிக்கிறாருன்னு சொல்லக்கூடாது என்றனர் ஆண்கள்.
அப்போது ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தப் பெண்கள்.. அய்ய்யோ பாடியைக் காணம்.. பாடியைக் காணம் என்று கத்த என்ன ஆச்சு..என்ன ஆச்சு..என்று ஆண்கள் அங்கு ஓடி போய் பார்த்தனர்.
இங்கே பாருங்க.. பாடியைச் சுத்திய வேட்டிதான் கிடக்கு.. பாடியை காணம் என்று பெண்கள் சொல்ல.. ஆண்கள் திடுக்கிட்டனர்.
பாடியைக் காணமா.. பறந்தா போகும்.. வாய்ப்பில்லையே..பூங்கொடி பாடியைத் தூக்கி மறைச்சிவச்சிட்டாளா என்று ஆண்கள் கேட்க பாடியை சுத்தின வேட்டி கிடக்க என்று பெண்கள் பதட்டமாகக் கேட்டனர்.
வேட்டி இல்லாம பாடியா.. பெண்கள் எல்லாம் போங்க.. பயந்திடுவீங்க.. நாங்க உள்ளே போயி பார்த்திட்டு வருகிறோம் என்று ஆண்கள் மீசையை முறுக்கினர்.
மீண்டும் வாசல் பக்கம் ஆண்களும் பெண்களும் வந்தனர். பூங்கொடி..பாடியை எங்கே மறைச்சி வச்சிருக்கே என்று பெண்கள் கேட்க.. பூங்கொடியோ.. உள்ளே பெட்டியிலே வச்சிருக்கேன் என்று அப்பாவியாகச் சொன்னார்.
அதைக்கேட்ட ஆண்கள்.. என்ன பெட்டியா.. என்னப் பெட்டி..என்று கேட்க.. பூங்கொடி டிரங் பெட்டி என்க.. ஆண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
என்ன பாடியை டிரங்க் பெட்டியிலா வச்சே என்று பெண்கள் கேட்க.. பூங்கொடி.. ஆமா.. அதில் என்ன தப்பு என்றார்.
ஆண்கள் ..என்ன இப்படி பேசுறா.. டிரங்பெட்டிக்குள்ளே எப்படி பாடியைவைக்க முடியும்.. மடக்கிவச்சுப்புட்டாளா.. முடியாதே.. அதுக்கு தனிப்பெட்டி இருக்கே என்று பதட்டமானார்கள்.
எதுக்கும்..உள்ளேப் போய் பார்த்துவிடுவோம்.. என்று ஆண்கள் வீட்டுக்குள் நுழைய முயல.. பூங்கொடி.. ஏங்க.. உள்ளே வராதீங்க.. அவர் குளிக்கிறாரு.. போங்க.. போங்க என்று ஆவேசமாக கத்தினார்.
அவர்கள் .போகாமல்..பூங்கொடியுடன் வாக்குவாதம் செய்ய அப்போது வீட்டு பாத்ரூமிலிருந்து ஒரு பாட்டு கேட்டது.. யாரை நம்பி நான் பிறந்தேன்.. போங்கடா போங்க..
என் காலம் முடிஞ்சப் பின்னே வாங்கடா வாங்க..
வாங்கடா வாங்க..ஆ..ஆ.. என்ற பாடல் எதிரொலித்தது.
அதைக் கேட்ட பெண்கள்.. என்ன அதிசயம்..பாடி பாடுது என்க.. ஆண்கள் ஆமா.. பாடி பாடுது என்று அதிர்ச்சியில் கேட்டனர்.
பூங்கொடி.. ஆமா.. பாடி பாடுறார்.. என்க எங்கே என்று பெண்கள் கேட்க.. பாத்ரூமில் என்று பூங்கொடி சொன்னார்.
அப்போ டிரங் பெட்டியில பாடியில்லையா என்று பெண்கள் சந்தேகத்துடன் கேட்டனர்.
பூங்கொடியோ.. டிரங் பெட்டியிலதான் பாடியிருக்கு என்க.. அப்போ.பாத்ரூமில என்ன ஒரே குழப்பமா இருக்கே என்று பெண்கள் தலையை பிய்த்துக்கொண்டனர்.
ஆண்களோ ஒன்றும் புரியாமல் கண்களை கசக்க..தென்னையப் பெத்தா இளநீறு..
பிள்ளையைப் பெத்தா கண்ணீரு..
பெத்தவன் மனசு பித்தம்மா..
பிள்ளை மனது கல்லம்மா என்ற குரல் பலமாக் கேட்டது.
இது யார் குரல் என்று ஆண்கள் கேட்க.. அவருதான் என்று பூங்கொடி சொல்ல.. பெட்டியில பாடி.. பாத்ரூமில.. பாட்டு.. பெட்டியிலே பாடி.. பாத் ரூமிலே பாட்டு.. ஆபத்து.. ஏதோ ஆவி வேலையா இருக்கும் போல. என்று பயந்தனர். ஆவியை விரட்ட கொண்டு போன சேவக் கோழி திரும்பி வந்தப்பவே நினைச்சேன்.. ஏதோ ஆவி ஏதாவது செய்யும் என்று பெண்கள் சொல்லிய போது கண்ணாயிரம் வீட்டு ஓட்டு கூரை மேலிருந்து சேவல் கொக்கரக்கோ கோ..என்று கூவியது.
அய்யோ..அதோ வந்துட்டு.. நம்மள ஒரு மாதிரி பார்க்குது.. முறைக்குது என்று அவர்கள் சேவலை விரட்ட முயல.. அது கோபத்தில் அவர்களை நோக்கி பறந்து வந்தது.
அடி ஆத்தாடி என்றபடி அவர்கள்.. அங்கிருந்து ஓட்டம்பிடித்தனர்.
பூங்கொடியின் அப்பா அருவா அம்மாவாசைக்கு போன் பண்ணி தகவல் சொல்வோம்.. அவர் வரட்டும்..அப்புறம் பாடியைப் பார்ப்போம் என்று அருவா அமாவாசைக்கு பரபரப்புடன் போன் செய்தனர்.
கண்ணாயிரமோ..பாத்ரூமில் உற்சாகமாக ..குளத்திலே தண்ணி இல்ல
கொக்குமில்ல மீனுமில்ல
பெட்டியிலே பணமில்லே..
சொந்தம் என்று புள்ளையில்லே..
யாரை நம்பி நான் புறந்தேன்
போங்கடா போங்க
என் காலம் வெல்லும் அது வென்ற பின்னே
வாங்கடா வாங்க..என்று மனம் போனப்படி பாடினார்…
பூங்கொடி..என்ன குளிச்சாச்சா..என்று குரல் கொடுக்க..சோப்பு போடுறேன் என்று கண்ணாயிரம் பதில் சொல்ல..சோப்பு போடுறன்னு சோப்பை கீழே தரையில் போடாதீங்க..மேல போடுங்க என்றார்.
கண்ணாயிரம்..நிலமை புரியாமல் சோப்பை மேலே போட்டு பிடித்துக்கொண்டிருந்தார்.(தொடரும்)

-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.