சிவகிரியில் நாம்தமிழர் கட்சி நிர்வாகி வீட்டில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை
1 min read
NIA raids the house of Namtamizhar party executive in Sivagiri
2.2.2024
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள இராயகிரி விஸ்வநாதப்பேரி பகுதியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி மதிவாணன் வீடு மற்றும் ஸ்டூடியோவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள்.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள இராயகிரி விஸ்வநாதப்பேரி பகுதியைச் சார்ந்தவர் சந்திரன் என்பவரது மகன் மதிவாணன் இவர் நாம் தமிழர் கட்சியினுடைய கொள்கை பரப்பு செயலாளராக இருந்து வருகிறார்.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். இவரது வீட்டில் இன்று அதிகாலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மூன்று பேர் கொண்ட குழுவினர் அதிரடியாக அவரது வீடு அவரது ஸ்டுடியோ உள்ளிட்ட பகுதிகளில் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்பட்டு விட வண்ணம் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் மதிவாணன் வீட்டில் ஸ்டுடியோவிலும் சோதனை நடைபெறுவதை தொடர்ந்து ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் அங்கு குவிந்து வருகின்றனர்.
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தென்காசி மாவட்டத்தில் மட்டும் அல்லாமல் கோவை சிவகங்கை மாவட்டங்களிலும் திருச்சியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டிலும் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.