June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அருகே சாலையில் கிடந்த 5 பவுண் தங்கச்செயினை போலீசில் ஒப்படைத்த தம்பதி

1 min read

A couple handed over a 5-pound gold chain lying on the road near Tenkasi to the police

17.2.2024
தென்காசி அருகே ஆய்க்குடி பேரூராட்சி பகுதியில் சாலையோரம் கிடந்த 5 பவுண் எடையுள்ள ரூபாய் ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தங்கச் செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தம்பதியருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பகுதியை சேர்ந்த குமார் என்ற நபர் அப்பகுதியில் கொத்தனார் வேலை செய்து வருகிறார், இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 09 மணி அளவில் குமார் மற்றும் அவரது மனைவி கற்பகவல்லி ஆய்க்குடி மாயாண்டி கோவில் அருகே உள்ள கடைக்குச் சென்று வீடு திரும்பும் வழியில் சாலையோரம் சுமார் 2,50,000/- ரூபாய் மதிப்பிலான 05 பவுன் தாலி செயின் கீழே கிடந்ததை எடுத்து உரிய முறையில் ஆய்க்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

குமார் மற்றும் கற்பகவல்லி தம்பதியினரின் இச்செயலை பாராட்டி தென்காசி மாவட்ட காவல்துறையின் சார்பாக ஆய்க்குடி காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஹரிஹரன் குமார் மற்றும் அவரது மனைவி கற்பகவல்லி ஆகியோரின் நேர்மையை பாராட்டி அவருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார் மேலும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இத்தம்பதியினரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *