June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

கீழப்பாவூர் பேரூராட்சியில் புதிய பணிகள் துவக்க விழா

1 min read

Inauguration ceremony of new works in Geezapavur municipality

17.2.2024
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பேரூராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் துவக்க விழா நடைபெற்றது இதில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் கலந்து கொண்டு புதிய பணிகளை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் சு.ராஜன் தலைமை தாங்கினார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சுரண்டை வே.ஜெயபாலன், கீழப்பாவூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜா.மாணிக்கராஜ் , பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் கி.ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கீழப்பாவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 150 இடங்களில் தெருமின் விளக்கு அமைக்கும் பணி துவக்க விழா, திடக்கழிவு மேலாண்மை திட்ட பூங்காவில் பேட்டரி வாகனங்கள் நிறுத்துமிடம் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் செ.கோடிஸ்வரன், மு.மாலதி முருகேசன், மு.கனகபொன் சேகா முருகன், இசக்கிராஜ், ஜா.ஜேஸ்மின் யோவான், ரா.விஜி ராஜன், மா.இசக்கி முத்து, சு.பவானி இலக்குமண தங்கம், தா.தேவஅன்பு, சீ.பொன் செல்வன் மற்றும் பொன்.அறிவழகன், ச.செல்வன், ரெ.ஜெகதீசன், ஆ.தங்கச்சாமி, சா.சுடலை ஈசன், ஆ.சிவன், காளிமுத்து, ரா.ராமகிருஷ்ணன், பெரியசாமி, சிவன், கணேசன், தேவேந்திரன், குத்தாலிங்கம், மலைச்சாமி, இசக்கிமணி, தமிழ்ச் செல்வன், முருகன் பேரூராட்சியின் இளநிலை பொறியாளர் இ.மாரியப்பன், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.முடிவில் கீழப்பாவூர் பேரூராட்சியின் செயல் அலுவலர்
ஜா.மாணிக்கராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *