June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

கீழப்பாவூர் ஒன்றிய பகுதியில். 2 வது நாளாக திமுக திண்ணை பிரச்சாரம்

1 min read

In Geezpavur union area. 2nd day DMK field campaign

28.2.2024
தென்காசி தெற்கு மாவட்டம்
கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய பகுதியில் 2 வது நாளாக திமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் திண்ணை பிரசாரம் செய்தார்.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின்உத்தரவின் பேரில், தென்காசி தெற்கு மாவட்டம், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய பகுதியில் முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் நேற்று 2வது நாளாக இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அதன்படி
திப்பணம்பட்டி ஊராட்சி, பாகம் எண் 157 இல் வீடு, வீடாக சென்று இரண்டரை ஆண்டு கால திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் க.சீனித்துரை, பாக பொறுப்பாளரும், ஒன்றிய கவுன்சிலருமான ராஜேஸ்வரி, ஒன்றிய பொருளாளர் வினைதீர்த்தான், முன்னாள் பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கபில் தேவதாஸ், ஒன்றிய பிரதிநிதி ராஜேந்திரன், செல்லதுரை, வழக்கறிஞர் அணி கிளை செயலாளர் உலகநாதன், மகாராஜன், முத்துக்குட்டி, தங்கராஜ், ஞானசேகர், ராமச்சந்திரன், கருப்பசாமி, இளங்கோ, ஆசிரியர் விஜயன், சந்துரு, குருசாமி, செல்வன், ராமச்சந்திரன், சசிகுமார், காமராஜ், சுடரொளிவு, சுப்பிரமணியன், ராமசாமி , பாண்டியன், முருகன் வெற்றிவேல் நாடார்,முத்துக்குமார், ஐயாத்துரை, தங்கராஜ், வரதராஜன், செல்லத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *