June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி திறப்பு விழா

1 min read

Tamil Nadu Government’s Achievement Photo Exhibition Opening Ceremony in Tenkasi

16.3.2024
தென்காசி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி கலையரங்கத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் தஎஸ்.பழனி நாடார்,சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் .ஈ.ராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் .ஆர்.ராமசந்திரன் பேசியதாவது,:-

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்று கடந்த இரண்டரையாண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு அரும்பணிகளை செய்து வருகிறார். தென்காசி மாவட்டம் வளர்ந்து வரும் மாவட்டம். தற்போது திருநெல்வேலி யிலிருந்து தனி மாவட்டமாக பிரிந்துள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தென்காசி மாவட்டத்தின் மீது தனி அக்கறை கொண்டு பல புதிய நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள். நமது முதலமைச்சர் அவர்கள் ஏழை மக்களின் முதலமைச்சராக திகழ்ந்து வருகிறார். இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்காக ரூ 1கோடியே 12 இலட்சம் தமிழக அரசால் செலவழிக்கப் பட்டுள்ளது. செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகள் குறித்த கண்காட்சியினை பார்வையிட்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊரகவளர்ச்சி துறை மூலமாக கட்டப்பட்டுள்ள ரூ.1 கோடியே 28 இலட்சத்து 16 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 5 புதிய கட்டடங்களையும், கூட்டுறவுத்துறையின் மூலம் ரூ.67 இலட்சத்து 80 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 4 புதிய கட்டடங்களையும், ரூ.1 கோடியே 78 இலட்சம் கட்டப்பட்டுள்ள தென்காசி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக ரூ.3 கோடியே 74 இலட்சத்து 16 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, வருவாய்த்துறை மூலமாக 226 பயனாளிகளுக்கு ரூ.51.89 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாவட தொழில் மையம் அலுவலகத்தின் மூலமாக 11 பயனாளிகளுக்கு ரூ.15.46 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், இணை இயக்குநர் வேளாண்மை துறையில் 05 பயனாளிகளுக்கு 5.0.39 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், கூட்டுறவுத்துறையின் மூலமாக 30 பயனாளிகளுக்கு ரூ.77.36 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் மூலமாக 80 பயனாளிகளுக்கு ரூ.4.38 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக 97 பயனாளிகளுக்கு ரூ.93.13 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலைத்துறை மூலமாக 10 பயனாளி களுக்கு ரூ.3.62 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலமாக ரூ.64 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும். கலை பண்பாட்டுத்துறை மூலமாக 5 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும்.

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டத்தின் மூலம் 16 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 கோடியே 54 இலட்சத்து 93 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் என மொத்தம் ரூ.4 கோடியே 3 இலட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேல மேலாண்மைத்துறை அமைச்சர்கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் வழங்கினார்.

முன்னதாக கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் தென்காசி சித்திரசபை மாணவிகளின் பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, வருவாய் கோட்டாட்சியர் தலாவண்யா, தென்காசி நகர் மன்ற தலைவர் ஆர்.சாதிர், தென்காசி ஒன்றியக்குழுத்தலைவர் மு.ஷேக் அப்துல்லா, ஆலங்குளம் வஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திவ்யா மணிகண்டன், செயற்பொறியாளர் (கட்டடம் மற்றும் பராமரிப்பு) அணிட்டா சாந்தி, உதவி செயற்பொறியாளர்(கட்டடம் மற்றும் பராமரிப்பு) இப்ராகிம், உதவி பொறியாளர் செல்வி.ராணி, செய்தி மக்கள் தொடபு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர் அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *