தென்காசி மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு தூதுவர்கள் நியமனம்
1 min read
Appointment of Election Awareness Ambassadors in Tenkasi District
26.3.2024
தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான முதல் தேர்தல் வாக்காளர் களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் விழிப்புணர்வு தூதுவர்களை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் நியமனம் செய்துள்ளார்
தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பேரணி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம், இருசக்கர வாகன பேரணி, முதியோர் இல்லங்களில் முதியோர்களுக்கான விழிப்புணர்வு முகாம், மூன்று இலட்சம் வாக்காளர்களுக்கான மாபெரும் கையெழுத்து இயக்கம், மாற்றுத்திறனாளிக்கான தேர்தல் விழிப்புணர்வு முகாம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் 100% வாக்களிப்பதற்காக தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் டி.அபிதா பெல்சியா (காமராஜர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சுரண்டை), ஏ.சன்மதி (அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆலங்குளம்), எம்.பேச்சியம்மாள் (அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடையநல்லூர்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களை கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான முதல் தேர்தல் வாக்காளர்களுக் கான தேர்தல் விழிப்புணர்வு தூதுவர்களாக நியமித்து அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தேர்தல் விழிப்புணர்வு தூதுவர்களுக்கான ஆணை வழங்கப்பட்டது.
இவர்கள் மூலம் மாவட்டத்திலுள்ள அனைத்து 31 கல்லூரிகளுக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான முதல் தேர்தல் வாக்காளர்களுக் கான தேர்தல் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும். இந்நிகழ்ச்சியியல் மகளிர் திட்ட இயக்குநர் இரா.மதி இந்திரா பிரியதர்ஷினி கலந்து கொண்டார். மேலும் உதவி திட்ட அலுவலர் அ.பிரபாகர் மற்றும் மகளிர் திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.