தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்
1 min read
In Tenkasi, Dr. Krishnasamy is contesting on the double leaf symbol
27.3.2024
பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தென்காசி தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவேன் என்று கிருஷ்ணசாமி அறிவித்தார், இதனையொட்டி, டிவி சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் அவர் விண்ணப்பித்தார். ஆனால் தேர்தல் ஆணையம் இன்னும் சின்னத்தை ஒதுக்கவில்லை.
இந்நிலையில், தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.