April 30, 2024

Seithi Saral

Tamil News Channel

தீவிர சிகிச்சைப் பிரிவில் மன்சூர் அலிகான்

1 min read

Mansoor Ali Khan in the intensive care unit

17.4.2024
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த மன்சூர் அலிகான் இன்று குடியாத்தம் பகுதியில் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து குடியாத்தத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டார்.

இந்நிலையில், மன்சூர் அலிகான் சென்னை கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.