கருப்பை அழிக்க முயன்ற கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்
1 min readKannayiram who tried to destroy the “Karupu”/ comedy story/ Tabasukumar
4.7.2024
கண்ணாயிரம் பஸ்விபத்தில் பழைய நினைவுகள் மறந்ததால் அவரது மாமனார் இளமை தோற்றத்தில் தலைக்கு டை அடித்துவந்தார்.
கண்ணாயிரம் மனைவி பூங்கொடி கர்ப்பமாக இருப்பதற்கு தான் காரனம் இல்லை என்று கண்ணாயிரம் சொன்னதால் கண்ணாயிரம் மாமனார் அருவாஅமாவாசை கோபம் அடைந்து கண்ணாயிரத்தை தலையால் முட்டித் தாக்கினார்.
இதில் கண்ணாயிரம் சட்டையெல்லாம் கருப்பு மையாகிவிட்டது. இதைப்பார்த்த பூங்கொடி கோபத்தில்.. என்னப்பா.. டை அடிச்சிங்க? இப்படி அவர் சட்டையெல்லாம் கருப்பாயிட்டு என்று ஆதங்கப்பட, அருவாஅமாவாசையோ.. ஏம்மா.. உன் கர்ப்பத்துக்கு காரணம் தான் இல்லைங்க கண்ணாயிரம்.. அவன் முகத்திலே கரியை பூசாம விடமாட்டேன் என்று மீண்டும் பாய்ந்தார்.
கண்ணாயிரம் முகத்தில் தன் தலைமுடி கருப்பை வைத்து தேய்த்தார். கண்ணாயிரம் ..தடுக்க முயன்றார். முடியவில்லை. ஏய் உன் முகத்திலே கரியை பூசிட்டேண்டா.. பொய் சொன்ன உனக்கு இது சரியான தண்டனை..வா.. அந்த முகத்தை மக்களிடம் காட்டு ..உன்னை ஊர்வலமாக அழைத்துச் செல்கிறேன்.. உண்மையை ஒத்துக்கொள்என்று அருவாஅமாவாசை சொல்ல.. கண்ணாயிரம் தன் முகத்தில் உள்ள கருப்பை அழிக்க முயல.. அருவாஅமாவாசை கீழே கிடந்த கயிறை எடுத்து கண்ணாயிரம் கைகளை இறுக கட்டினார்.
ஆ..நான் நெல்லையிலே பலமாக இருக்கா என்று பார்த்து வாங்கிய கயிறு, இதுக்கா பயன்படுது என்று கண்ணாயிரம் நினைக்காதே.. அதுவே உனக்கு இப்போது மறந்துப் போச்சு.. அதுக்காக பொண்டாட்டி கர்ப்பமானதைக் கூட மறந்தா எப்படி.. ஒரு உண்மை தெரிஞ்சாகணும் என்று அருவாஅமாவாசை கண்ணாயிரத்தை கட்டி தெருவுக்கு இழுத்துவந்தார்.
பூங்கொடி தடுத்தார். அதெல்லாம் ஒண்ணும் இல்லப்பா என்றார்.
அருவாஅமாவாசையோ..நீ சும்மா இரும்மா.ஊருல நியாயம் கேட்டாத்தான் சரியாவரும் என்றார்.
ஊர்மக்கள் கூடினர். ஒருவர் அருவாஅமாவாசைப் பார்த்து ஏம்பா கண்ணாயிரம் கையைக் கட்டிவச்சிருக்கே என்று கேட்க, அருவாஅமாவாசை.. ஓ.அதுவா..கருப்பை அழிக்கப்பாக்கிறான் ..அதான் கட்டிவச்சிருக்கேன் என்றார்.
அதை தவறாகப் புரிந்து கொண்ட முதியவர், என்ன கற்பழிக்கப் பார்க்கிறானா..அப்போ கட்டிவைப்பது மட்டுமல்ல, அடியும் கொடுக்கணும் என்றார்.
இன்னொருவர்..அவசரப்படாதீங்க..எதுக்கும் கண்ணாயிரத்துக்கிட்ட விசாரிக்கிடுவோம்.. ஏய்..கண்ணாயிரம்.. கற்பழிக்கப்பாத்தியா என்று கேட்க.. கண்ணாயிரம் விவரம் புரியாமல்.. ஆமா..நான் கருப்பை(டையால் ஆன கருப்பு நிறத்தை) அழிக்கப் பாத்தேன்.. இவரு தடுத்து கையில் கயிறாலே கட்டிப்புட்டாரு..என்ன செய்வேன்..கருப்பை அழிக்க முடியல.. கொஞ்சம் கயிற்றை அவுத்துவுட்டியன்னா.. கருப்பை அழிச்சிடுவேன் என்க.. கண்ணாயிரம் முகத்தில் உள்ள கருப்பை அழிக்க முயல்வதாகச் சொல்வதை தப்பாகப் புரிந்து கொண்டு..கண்ணாயிரத்தை தாக்கப் பாய்ந்தார்கள். அய்ய்யோ என்ற அலறினார்.
-வே.தபசுக்குமார்,புதுவை.