June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

வாடீஸ்அப் மூலம் பாலியல் தொல்லை-தென்காசி மாவட்ட முதன்மை வருவாய் ஆய்வாளர் கைது

1 min read

Sexual Harassment through WhatsApp- Tenkasi District Principal Revenue Inspector Arrested

5.7.2024
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வாட்ஸ்அப் மூலம் பெண்ணிற்கு தவறான குருஞ்செய்தி அனுப்பிய வருவாய் ஆய்வாளர் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர் பகுதியை சேர்ந்த பெண்ணிற்கு பாலியல் ரீதியான குருஞ்செய்திகளை அனுப்பிய தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதன்மை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் குருவையா (வயது45) என்பவரை சங்கரன்கோவில் டவுண் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதே போல் அதே பெண்ணிற்கு பாலியல் ரீதியாக தொடர்ந்து தவறான குருஞ்செய்தி அனுப்பி வந்த அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார், ராஜா, சண்முகபிரபு ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் தவறான குருஞ்செய்தி அனுப்பிய வருவாய் ஆய்வாளர் குருவையா உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *