தென்காசியில் ஒரே நாளில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
1 min read
4 people arrested in the same day in Tenkasi under gangster law
7.8.2024
தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 4 குற்றவாளிகளை தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் அதிரடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்ப்ட்டனர். தென்காசி மாவட்டம், சின்னக்கோவிலாங் குளம் காவல் நிலைய கொலை வழக்கின் குற்றவாளியான சேத்தூர் மேட்டுப்பட்டி குருசாமி என்பவரின் மகன் செந்தூர்குமார்@ வெள்ளையன் (வயது 24), கடையநல்லூர் காவல் நிலைய கொலை வழக்கின் குற்றவாளி யான மேலக்கடையநல்லூர் கிருஷ்ணன் என்பவரின் மகன் முருகன்(வயது 46) மற்றும் தென்காசி காவல் நிலைய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் குற்றவாளிகளான குத்துக்கல்வலசை சீதாராமன் என்பவரின் மகன் சக்திவேல் (வயது 26), இடைகால் துரைசாமியாபுரம் பெருமாள் சாமி என்பவரின் மகன் ராமகிருஷ்ணன் (வயது 28), ஆகியோர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் பரிந்துரையின் பேரில், தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் உத்தரவின் பேரில் மேற்படி நான்கு நபர்களும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி பி சுரேஷ்குமாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு குற்றவாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் தென்காசி மாவட்டம் முழுவதும் இனி குற்ற சம்பவங்கள் வெகுவாக குறையும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.