“ரூப் கவுர்” கட்டாய உடன்கட்டை ஏற்றிய வழக்கில், 37 ஆண்டுக்குப்பின் 8 பேர் விடுதலை
1 min read
8 people acquitted after 37 years in “Roop Kaur” forced contract case
14.10.2024
ராஜஸ்தானில் உள்ள திவராலா பகுதியில் 37 ஆண்டுகளுக்கு முன்னர் ரூப் கவுர் என்ற 18 வயது பெண் உயிரிழந்த கணவனுடன் உடன்கட்டை ஏற்றி கொல்லப்பட்டார். அதாவது, கணவனின் சடலம் எரிந்துகொண்டிருக்கும் சிதைத்தீயில் ரூப் கவுரை கட்டாயமாக இறக்கி அவ்வூர் மக்கள் கொலை செய்தனர்.
1829 ஆம் ஆண்டு அப்போதைய வைஸ்ராய் வில்லியம் பெண்டிங் பிரபு உடன்கட்டை ஏறும் சதி வழக்கத்தை முற்றிலுமாக தடை செய்தார். ஆனாலும் 1987 செப்டம்பர் 4 ஆம் தேதி கணவனின் எரியும் சிதையில் 18 வயது ரூப் கவுர் உடன்கட்டை ஏற்றப்பட்டார். இவரே இந்தியாவில் சதியால் உயிரிழந்த கடைசி பெண் என்று நம்பப்படுகிறது.
ரூப் கவுர் 18 வயதை எட்டியதும் 1987 ஜனவரி 18 ஆம் தேதி ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அருகே சிகாரா திவராலாவை சேர்ந்த மால் சிங் என்பவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார். ஆனால் திருமணமான 8 மதங்களிலேயே கணவர் மால் சிங் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார்.
எனவே இந்துமத வழக்கப்படி ரூப் கவுர் மால் சிங் எரியூட்டப்பட்ட சிதையில் உயிருடன் உடன்கட்டை ஏற்றப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக சரூப் கன்வரின் மாமனார், மைத்துனர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கே இந்தியாவின் கடைசி சதி வழக்காகும்.
1996 ஆம் ஆண்டு அக்டோபரில் மாமனார் – மைத்துனர் இருவருக்கும் எதிராக ஆதாரம் இல்லை என்று விடுவிக்கப்பட்டனர். அதன்பின் 2004 ஆம் ஆண்டு நடந்த விசாரணையில் ஆதாரங்கள் இல்லை என கூறி 25 பேர் விடுவிக்கப்பட்டனர். மேலும் 6 பேர் சிறையிலேயே உயிரிழந்தார்கள்.
6 பேர் ஜாமீன் வாங்கிக்கொண்டு தலைமறைவாகினர். இந்த வழக்கில் கைதானவர்களில் சிறையில் மீதமிருந்தது 8 பேர் மட்டுமே. மகேந்திர சிங், ஷ்ரவன் சிங், நிஹால் சிங், ஜிதேந்திர சிங், உதய் சிங், தஸ்ரத் சிங், லக்ஷ்மண் சிங் மற்றும் பன்வர் சிங் என்ற இந்த 8 பேருக்கும் எதிராக எந்த ஆதாரமும் இல்லை என கூறி சதி நிவாரண நீதிமன்றம் கடந்த புதன்கிழமை அன்று விடுதலை செய்து உத்தரவிட்டது.