August 19, 2026

Seithi Saral

Tamil News Channel

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

1 min read

Tourists allowed to bathe at Manimutharu Falls

26.3.2025
நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் இந்த அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்வது வழக்கம்.

இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவிக்கான நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டது.

இந்த நிலையில், மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரானதால், 4 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *