June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை: முப்படைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

1 min read

Operation Sindhu: Prime Minister Modi praises the three forces

7/5/2025
ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந்தேதி பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இரவு முழுவதும் துல்லியமாக தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம் பயங்கரவாதிகளின் 9 நிலைகளை அழித்துள்ளது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணை தாக்குதல்களை நடத்தி உள்ளது.

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

ஆபரேசன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவை கூட்டத்தின்போது பேசிய பிரதமர் மோடி, முப்படையினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் மிகச்சரியான நடவடிக்கை என தெரிவித்துள்ள அவர் மத்திய அமைச்சர்களுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *